சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்

அமெரிக்காவில் ஆசியக் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசியக் கலை அருங்காட்சியங்கள் இரு நகரங்களில் உள்ளன. ஒன்று கலிபோர்னியா மாவட்டத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலும் மற்றுமொன்று வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் அதிக அளவில் வாழ்வது அதற்கு முக்கிய காரணம் ஆகும்.

சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். . இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ஆவ்ரி ப்ரெண்டேஜ் (Avery Brundage) என்பவர்.

வரலாறு

ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1959 இல் சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார். ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பதாகும். அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த ஆசியக் கலை அருங்காட்சியகம் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களைச் சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார். அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான் ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

சான் ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான் ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்.

மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார். அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை. இவரது முயற்சியால் இன்று அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகிலேயே அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது . இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.

கலைப்பொருட்கள்

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் கலைப்பொருட்கள்,

 1. சீனா
 2. ஜப்பான்
 3. கொரியா
 4. தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோசு, வியட்நாம், பிலிப்பைன்சு, இந்தோனேசியா, மலேசியா)
 5. தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம், இலங்கை)
 6. இமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேப்பாளம், பூட்டான், மங்கோலியா)
 7. பாரசீகம், மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிசுத்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)

என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

சிறிய மரகதக் கற்கள் முதற்கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.

இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும் வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:

 1. புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
 2. ஆசிய நாடுகளுக்கிடையேயான கலாச்சார மற்றும் வணிக பரிவர்த்தனைகள்
 3. ஆசிய நாடுகளில் இடம்பெறும் நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும்

சிறப்புக் கண்காட்சிகள்

இந்தியாவினைக் குறிக்கும் சிறப்புக் கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்:

 • மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
 • இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India's Royal Courts (2011)]
 • ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியக் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with 'Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]
 • இந்திய தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]

போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும் சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.

வெளியிணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Tom Carden
14 June 2012
You don't need a museum ticket to eat here and the canteen-style cafe is tasty and affordable. Just ask for a sticker at the desk. That said, check out the collection at least once, it's fantastic!
Bình Hà
30 October 2016
Great & thorough collection. I could've spent a day in there. Suprisingly have an item of Vietnam on the South East Asia department, which is the first time I ever saw one. Vast collection of China.
Russell Allen Esmus
8 August 2014
I love that they offer a free day each month. With that said, their rotating featured collections are worth paying for. I like the miniatures also the pottery is beautiful.
Jessica Melgoza
16 December 2018
It’s a very beautiful place and very interesting, I love it, they have two options for you, $$15 for visiting only the 2nd floor or $$25 for the all exhibitions.
Jenny
31 May 2015
First free Sundays, huge museum. One of the best in the Bay Area, especially awesome if you're into the history of Eastern religions
Conner Hobson
4 March 2016
This is the most fully comprehensive museum I've been to, exhibiting art from China, Japan, Korea, and Southeast Asia. Set aside over 2 hours if you want to see everything.
Tue-Sun 10:00 AM–5:00 PM

Asian Art Museum Foursquare இல்

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் Facebook இல்

Pacific Remedy Penthouse - Twitter Square, a Tritium Premier Collection

தொடங்கி $591

Inn at the Opera

தொடங்கி $298

Sleep Over Sauce

தொடங்கி $0

Travelodge by Wyndham San Francisco Central

தொடங்கி $197

SOMA Park Inn - Civic Center

தொடங்கி $199

Days Inn by Wyndham San Francisco Downtown/Civic Cntr Area

தொடங்கி $318

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bill Graham Civic Auditorium

The Bill Graham Civic Auditorium (formerly San Francisco Civic

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
San Francisco City Hall

San Francisco City Hall is the seat of government for the City and

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
War Memorial Opera House

The War Memorial Opera House in San Francisco, California is located

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Louise M. Davies Symphony Hall

Louise M. Davies Symphony Hall, the concert hall component of the San

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Warfield Theatre

The Warfield Theatre, colloquially referred to as The Warfield, is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cathedral of Saint Mary of the Assumption

The Cathedral of Saint Mary of the Assumption, also known locally as

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Union Square, San Francisco

Union Square is a 2.6-acre (1.1 ha) public plaza bordered by Geary,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
SF Masonic Auditorium

The SF Masonic Auditorium (originally the Grand Masonic Auditorium and

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Музей Востока

Sharq muzeyi — jahondagi eng yirik muzeylardan biri. Moskvada 1918 y

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Shanghai Museum

The Shanghai Museum (Chinese: 上海博物館) is a museum of ancient Chinese a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Norton Simon Museum

The Norton Simon Museum is an Art Museum located in Pasadena,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Metropolitan Museum of Art

The Metropolitan Museum of Art is an art museum located on the eastern

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பிரித்தானிய அருங்காட்சியகம்

பிரித்தானிய அருங்காட்சியகம் என்பத

ஒத்த எல்லா இடங்களையும் காண்க