பிரம்பானான் கோயில்

பிரம்பானான் கோயில் (இந்தோனேசியம்: சண்டி பிரம்பானான் (அ) சண்டி ராரா ஜொங்ராங் (Candi Prambanan or Candi Rara Jonggrang) என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, இந்தோனேசிய யாவாப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஆகும். உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக, இக்கோயில் வளாகம், யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 47 மீ (154 அடி) உயரமான இக்கோயிலின் மைய விமானம், தென்கிழக்காசியாவின் மிகபபெரிய இந்துக் கோயில்களில் ஒன்றாக இருப்பதுடன், ஆண்டாண்டாய், பல்லாயிரம் உல்லாசப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இது திகழ்ந்து வருகின்றது.

முதலில் சிவனுக்காகவே கட்டப்பட்ட இவ்வாலயம், ஆரம்பத்தில் "சிவக்கிரகம்" என்றே அழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இக்கோயிலிலுள்ள பொ.பி 856ஆம் ஆண்டு "சிவக்கிரகக் கல்வெட்டு" கூறுகின்றது. பிற்காலத்தில், இதன் இருபுறமும் திருமால், பிரமன் ஆகியோருக்கு ஆலயம் எழுப்பப்பட்டு, தற்போதுவரை, மும்மூர்த்திகள் கோயிலாகவே இனங்காணப்பட்டு வருகின்றது.

வரலாறு

சாவகத்தின் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த வம்சமான சைலேந்திர வம்சத்துக்குப் போட்டியாக, இந்து வம்சமான சஞ்சய வம்சத்தால் அமைக்கப்பட்டதே இப்பிரமாண்டமான இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலின் பிரமாண்டக் கட்டமைப்பானது, மத்திய ஜாவாவின் மாதாராம் அரசில், மகாயான பௌத்தத்தின் வரவால் வீழ்ச்சியடைந்திருந்த இந்து அல்லது சைவ சமயம், பழையபடிக்கு முன்னிலைக்கு வர ஆரம்பித்ததைச் சுட்டுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதை அமைத்தவர், சஞ்சய வம்ச மன்னன் "ராகாய் பிகாதன்" என்று நம்பப்படுகின்றார். பிகாதனால் பொ.பி 850 அளவில் ஆரம்பமான இதன் கட்டுமானம், மன்னன் லோகபாலனாலும், பாலிதுங் மகாசம்பு மன்னனாலும் கட்டிமுடிக்கப்பட்டது. அதன் பின்னும், இக்கோயில், தட்சன், துலோதுங் முதலான பிற்கால மன்னர்களால் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது.

930களில், ஈசியான வம்சத்து இம்பு சிந்தோக் மன்னனால் மாதாராம் அரசு, கிழக்கு சாவகத்துக்கு இடமாற்றப்பட்டதை அடுத்து, பிரம்பானான் வளாகம் பொலிவிழக்கத் தொடங்கியது. பின்பு முற்றாகக் கைவிடப்பட்ட பிரம்பானான், பதினாறாம் நூற்றாண்டில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்வு ஒன்றால் பெருத்த சேதமடைந்ததுடன், சிதைந்த அப்பிரமாண்டக் கோயில் இடிபாடுகள் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்தியதுடன், அதைச் சுற்றி சுவாரசியமான மீமாந்தக் கதைகளையும் கட்டச் செய்தது.

சிதைந்துபோய் காட்டுக்குள் உடைந்தொழிந்து கிடந்த பெருங்கோயில் பற்றி உள்ளூர்வாசிகள் அறிந்திருந்தாலும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. இப்பகுதியில் கிடைத்த சிற்பங்களையும் கற்களையும் எடுத்துச் சென்று, அலங்காரப் பொருட்களாகவும் கட்டுமானங்கள் அமைக்கவும் பயன்படுத்துவதே தொடர்ந்தது. 1918 ஆம் ஆண்டு, எஞ்சிய சிதைவுகளைப் பாதுகாத்து சீரமைக்கும் பணியை, அப்போது சாவகத்தை ஆண்ட இடச்சு அரசு ஆரம்பித்தது. 1953 இல், பிரதான ஆலயமான சிவன் கோயில் முற்றாக மீளமைக்கப்பட்டு, சுகர்ணோவால் திறந்துவைக்கப்பட்டது.

கோயிற்றொகுதி

முன்பு பிரம்பாணன் வளாகத்தில் 240 பரிவாரக் கோயில்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் அவற்றில் இரண்டைத் தவிர மற்ற எல்லாம் சிதைந்தொழிந்து போய், அத்திவாரம் மட்டுமே காணப்படுகின்றது. தற்போது 240 கோயில்கள் காணப்படும் பிரம்பானான் வளாகத்தில் பின்வருவன முக்கியமான ஆலயங்கள்:

  1. 3 திரிமூர்த்திகள் கோயில்கள்
  2. 3 வாகனக் கோயில்கள்: நந்தி தேவர், கருடன், அன்னம் ஆகிய வாகனங்களுக்கு அமைக்கப்பட்டது.
  3. 2 அபித் கோயில்கள்: திரிமூர்த்தி மற்றும் வாகனக் கோயில்களுக்கிடையே வட தென்புறங்களிலுள்ள இரு ஆலயங்கள்.
  4. 4 கெளிர் கோயில்கள்: உள்வீதியின் நான்கு வாயில்களையும் அண்மித்துள்ள சிற்றாலயங்கள்.
  5. 4 பாதொக் கோயில்கள்:உள்வீதியின் நான்கு மூலைகளிலுமுள்ள சன்னதிகள்.
  6. 224 பரிவாரக் கோயில்கள்: பெரிய கோயிலைச் சுற்றி, சற்சதுரமாக நான்கு வரிசைகளில்: 44, 52, 60, 68 என்று அமைந்த சிற்றாலயங்கள்

பிரம்பானானின் மத்தியிலுள்ள மும்மூர்த்திகளுக்கான முக்கோயில்களில், பழமையானதும், உயரமானதும் பெரியதும், மத்தியிலுள்ள சிவன் கோயில் ஆகும். இவ்வாலயச் சுற்றுப்பிரகாரத்தில், இராமாயணக் காட்சிகள் செதுக்கப்ப்பட்டுள்ளமை, இதன் சிறப்பம்சமாகும். இக்கோயிலின் மத்தியில் 3 மீ உயரமான மகாதேவர் சிவபெருமான் கம்பீரமாக நிற்கின்றார். அதைச் சுற்றியுள்ள மூன்று கோட்டங்களில், கணேசன், துர்க்கை, அகத்தியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள துர்க்காதேவி, ராரா யோங்ரோங் ("மெல்லியலாள்") எனும் புகழ்பெற்ற சாவக இளவரசியொருத்தியின் நாட்டுப்புறக்கதையுடன் தொடர்புடையவள். சிவன் கோயிலுக்கு முன்னுள்ள நந்தி வாகனக் கோயிலில், சந்திரன், சூரியன் ஆகியோருக்கும் சிற்பங்கள் உள்ளன.

சுற்றுலாப் பயண மையம்

இந்தோனேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாக் கவர்ச்சி இடங்களில் ஒன்றாக, பிரம்பானான் திகழ்கின்றது.யாவா மற்றும் பாலி இந்துக்கள் தம் சமயச் சடங்குகளைப் பிரம்பானான் பகுதியில் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரம்பானான் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள திரிமூர்த்தி திறந்தவெளி அரங்கில், ஒவ்வொரு பூரணையிலும் இடம்பெறும், யாவாவின் பாரம்பரிய இராமாயண நடனம், இன்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அரங்காடலாகத் திகழ்கின்றது. 2006இல் யோக்யகர்த்தாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் பலத்த சேதமடைந்துள்ளதால், ஆலயத்தின் சில பாகங்களுக்குள் நுழைய, வருகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 பெப்ரவரி 2014இல் குமுறிய கெலுட் எரிமலைச் சாம்பல் பாதிப்பால், இக்கோயில் வளாகம் மூடப்பட்டதெனினும், சில நாட்களிலேயே மீளத் திறக்கப்பட்டது.

மேலும் பார்க்க

  • அங்கோர் வாட்
  • இந்தோனேசிய இந்துநெறி

உசாவியவை

  • Ariswara, third edition (1993) (English translation by Lenah Matius) Prambanan, Intermasa, Jakarta, ISBN 979-8114-57-4
  • Bernet Kempers, A.J. (1959) Ancient Indonesian art Cambridge, Mass. Harvard University Press.
  • Dumarcay, Jacques. (1989) (Edited and translated by Michael Smithies) The temples of Java, Singapore: Oxford University Press.
  • Holt, Claire (1967) Art in Indonesia: Continuities and change Ithaca, N.Y. Cornell University Press.
  • Jordaan, Roy http://www.iias.nl/iiasn/iiasn6/southeas/jordaan.html Prambanan 1995: A Hypothesis Confirmed
  • Leemans, C. (1855) Javaansche tempels bij Prambanan BKI, vol.3. pp. 1–26

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
6 June 2017
Thank you for enlightening us about the Prambanan temple complex. We had really wanted to add on a sidetrip to visit Borobudur when we were in Bali last year – but that just didn’t work out. Now we have 2 reasons to return to Indonesia http://mywonderasia.com/2017/03/06/prambanan-temple-compounds/
Jans Hansyah
12 March 2013
The temple compound, a UNESCO World Heritage Site, is the largest Hindu temple site in Indonesia, and one of the biggest in Southeast Asia. It is characterized by its tall and pointed architecture.
Goutama Bachtiar
20 April 2016
Having seen Borobudur temple's night look couple of times, last week I was standing out right there to rejoice how admiring the 9th-century Hindu temple also known as Candi Rara Jonggrang is.
Gregory K.
26 December 2017
Get the combined ticket for Borobudur and Prambanan. Sunset was good but I think sunrise might be a little better here. Check out the other temples on the compound. Less crowded and more info on it
Maciek Taraday
13 July 2017
Entrence tickets are expensive but it is definately wortal seing. Combain tickets for Prambanan and Borobudur are available. It is much chaper. Both temples are especialy worth visit for the sunrise.
MK Chan
19 August 2017
No doubt, it is incredible beautiful temple....unfortunately, many other stones build has been already destroyed but it is so big and beautiful temple, I have never seen...
Jose A. Madariaga
7 July 2016
Several temples are currently being rebuilt but the main temples are complete and impressive. SUNSET is not the big deal as it goes down behind many trees. Last of the temples is as great as quiet
Poeri Devata Resort Hotel

தொடங்கி $37

Joglo Ayem Tentrem

தொடங்கி $29

Quin Colombo Hotel Yogyakarta

தொடங்கி $21

Wisma Yosoputro

தொடங்கி $0

RedDoorz @ Kalasan

தொடங்கி $20

Roro Jonggrang Guesthouse

தொடங்கி $12

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Plaosan

Candi Plaosan, also known as the 'Plaosan Complex', is one of the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mount Merapi

Mount Merapi, Gunung Merapi (literally Mountain of Fire in Indonesia),

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
போரோபுதூர்

போரோபுதூர் என்பது இந்தோனீசியாவில் உள்ள ஜாவாத் தீவ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bunda Pemersatu Monastery

Bunda Pemersatu Monastery (Indonesian: Pertapaan Bunda Pemersatu,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mount Telomoyo

Mount Telomoyo is a stratovolcano in Central Java, Indonesia. The

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
உம்பூல் கோயில், மத்திய ஜாவா

உம்பூல் கோயில் (Umbul Temple) இந்தோனேசியாவில் உள்ள மதார

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Rawa Pening

Rawa Pening (literally meaning 'Clear Swamp', from the Javanese

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kampoeng Rawa

Kampoeng Rawa (alternatively Kampung Rawa, both Indonesian for 'Swamp

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அழியாத சோழர் பெருங்கோயில்கள்

புகழ்மிகு சோழர் பெருங்கோயில்கள் என்பவை தென்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
உதயகிரி குகைகள்

உதயகிரி குகைகள் (Udayagiri Caves) பண்டைய இந்து சமய சிற்பக்கலை

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
உம்பூல் கோயில், மத்திய ஜாவா

உம்பூல் கோயில் (Umbul Temple) இந்தோனேசியாவில் உள்ள மதார

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
BAPS Shri Swaminarayan Mandir London

BAPS Shri Swaminarayan Mandir (also commonly known as the Neasden

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சிங்கப்பூரில் லிட்டில் இந்த

ஒத்த எல்லா இடங்களையும் காண்க