கோவுசுகல் ஏரி

கோவுசுகல் அல்லது கோவுசுகல் தலாய் (Хөвсгөл далай, கோவுசுகல் பெருங்கடல்) அல்லது தலாய் ஏழ் (Далай ээж, பெருங்கடல் தாய்) என்பது மங்கோலியாவில் உள்ள ஓர் ஏரி ஆகும். நீர் கொள்ளவின் அடிப்படையில் இது அந்நாட்டின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இது (பைகால் ஏரிக்குத்) தங்கை ஏரி என்றும் அழைக்கப்படுகிறது.

புவியியல்

மங்கோலியாவின் வடமேற்கில் உருசிய எல்லைக்கு அருகில் கிழக்கு சயான் மலைகளுக்கு அடிவாரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. இது கடல் மேல்பரப்பில் இருந்து 1,645 மீ (5,397 அடி) உயரத்தில் உள்ளது. இதன் நீளம் 136 கி.மீ. (85 மைல்) மற்றும் ஆழம் 262 மீ (860 அடி) ஆகும். இது நீர் கொள்ளளவின்படி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். மங்கோலியாவின் நன்னீரில் கிட்டத்தட்ட 70% இந்த ஏரியில் தான் உள்ளது. உலகின் மொத்த நன்னீரில் 0.4% இந்த ஏரியில் உள்ளது. கதகல் நகரம் இந்த ஏரியின் தெற்கு இறுதியில் உள்ளது.

இதன் வடிநிலம் மிகவும் சிறியதாக உள்ளது. இது சிறிய கிளைகளை மட்டுமே கொண்டுள்ளது. இதன் தென்பகுதியில் இருந்து எகு ஆறு உருவாகிறது. எகு ஆறு செலங்கே ஆற்றுடன் இணைகிறது. செலேங்கே ஆறு பைகால் ஏரியில் கலக்கிறது. இரு ஏரிகளுக்கு இடையில் நீரானது சுமார் 1000 கிலோமீட்டர் (621 மைல்) பயணிக்கிறது. 1,169 மீ (3,835 அடி) கீழே இறங்குகிறது. எனினும் பார்வைக் கோடு 200 கி.மீ. (124 மைல்) மட்டுமே ஆகும். இதன் வடக்குப் பகுதி சைபீரிய தைகா காட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்காட்டின் அதிகம் காணப்படும் மரம் சைபீரிய லார்ச் (லாரிக்ஸ் சைபீரிகா) ஆகும்.

இந்த ஏரியானது பல்வேறு மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதில் உயரமான  மலையானது புரன்கான்/மோங் சரிதக் (3,492 மீ (11,457 அடி)) ஆகும். இம்மலையின் கொடுமுடியானது ஏரியின் வடக்குப் பகுதியில் சரியாக உருசிய-மங்கோலிய எல்லையில் உள்ளது. ஏரியின் மேற்பரப்பானது குளிர்காலத்தில் முழுவதுமாக  உறைந்து விடுகிறது. குளிர்காலத்தில் பனிப்பொழிவு கனரக வாகனங்களை சுமப்பதற்கு போதுமானதாக உள்ளது; பயண நேரத்தை குறைப்பதற்காக ஏரியின்  மேற்பரப்பானது குறுக்கு வழியாகவும் குளிர்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் அவ்வாறு இப்போது செய்யப்படுவதில்லை.  ஏனெனில் எண்ணெய் கசிவுகள் காரணமாகவும்,  வாகனங்கள் ஏரியில்  மூழ்குவதன் காரணமாகவும்  ஏரி அசுத்தமடைகிறது. கடந்த சில வருடங்களில் 30 லிருந்து 40 வாகனங்கள் வரை ஏரியில் மூழ்கியதாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

இது உலகின் பழமையான 17 ஏரிகளில் ஒன்றாகும். இது சுமார் 20 லட்சம் ஆண்டுகள் பழமையானதாகும். வசுதோக் ஏரியைத் தவிர்த்து இதன் நீர்தான் மிகவும் பழமையானது ஆகும். இது மங்கோலியாவின் மிக முக்கியமான குடிநீர் இருப்பு ஆகும். இதன் நீரானது எவ்வித சிகிச்சைகளுக்கும் உட்படுத்தப்படாமல் குடிக்க ஏற்றது ஆகும். இதன் நீரானது நீண்ட ஆழத்திற்கு வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வகையிலே மிகவும் தூய்மையாக உள்ளது. இந்த ஏரியில் பைகால் ஏரியை காட்டிலும் குறைந்த வகை மீன்களே உள்ளன. யுரேசிய பெர்ச் (பெர்கா ஃப்லுவியாடிலிஸ்), பர்போத் (லோடா லோடா), லெனோக் (ப்ரசிமிஸ்டக்ஸ் லெனோக்), கோவுசுகல் கிரேலிங் (திமல்லுஸ் நிக்ரேசென்ஸ்) போன்றவை இந்த ஏரியில் காணப்படும் முக்கியமான மீன் வகைகள் ஆகும். இதில் கோவுசுகல் கிரேலிங் இனப்பெருக்க காலங்களில் வேட்டையாடுதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும்  ஏரியின் பெரும்பகுதி முழுவதும் இவ்வினம் அதிகமாக உள்ளது.

இது மத்திய ஆசிய ஸ்டெப்பிக்கும், சைபீரிய தைகாவிற்கும் இடைப்பட்ட பகுதியாக பாதுகாக்கப்படுகிறது. கோவுசுகலின் பாதுகாக்கப்பட்ட நிலையின் போதிலும், சட்டவிரோத மீன்பிடித்தல் பொதுவானதாக உள்ளது. கில் வலைகளுக்கு வணிக மீன்பிடிக்கு எதிரான தடைகள் எப்போதாவது தான் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஏரி அமைந்துள்ள பரப்பானது உப்புத் தன்மையுடன் உள்ளபோதிலும் இதன் நீரானது நன்னீராக உள்ளது.

இந்த ஏரியைச் சுற்றிலும் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன. அவை இபெக்ஸ் காட்டாடு, அர்கலி, சிவப்பு மான், ஓநாய், வால்வரின், மஸ்க் மான், பழுப்புக் கரடி, சைபீரிய மூஸ் மற்றும் சேபல் உள்ளிட்டவையாகும்.

ஹோவ்ஸ்கோல் (கோவுசுகல்) நீண்ட கால சுற்றுச்சூழல் ஆய்வு தளம் (எல்.டி.ஈ.ஆர்.எஸ்) 1997ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஒரு விரிவான ஆராய்ச்சித் திட்டம் விரைவில் தொடங்கப்பட்டது. இப்போது நீண்ட கால ஆய்வு தளங்களின் சர்வதேச இணையப் பகுதியாகும். ஹோவ்ஸ்கோல் எல்.டி.ஈ.ஆர்.எஸ். ஆனது மங்கோலியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் உள்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கு ஒரு இடத்தை வழங்குகிறது. காலநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி, ஏரி மற்றும் அதன் நீர்நிலையை எதிர்நோக்கும் சில சுற்றுச்சூழல் சவால்களுக்கு நிலையான பதில்களை உருவாக்குதல் போன்றவற்றைச் செய்து வருகிறது.

சொல்லிலக்கணம் மற்றும் ஒலிபெயர்ப்புகள்

கோவுசுகல் என்ற பெயரானது "நீல நீர் ஏரி" என்ற துவன் மொழி சொற்களிலிருந்து பெறப்பட்டது. நூர் என்பது "ஏரி"க்கான மங்கோலியச் சொல்லாகும். இலக்கிய நய மொங்கோலிய எழுத்துமுறையில் உள்ள பெயரிலிருந்து எடுத்தெழுதிய பொருள்களான ஹுப்சுகுல், குப்சுகுல் போன்றவையும் காணப்படலாம்.

கோவுசுகல் ஏரியின் அகலக் காட்சி

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
கோவுசுகல் ஏரி க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
dom-otdykha-arshan

தொடங்கி $16

Meridian Hotel

தொடங்கி $29

Gornitsa Hotel

தொடங்கி $30

Guest House Baikal Yeti

தொடங்கி $14

Harat's Hotel

தொடங்கி $32

Master and Margarita Hotel

தொடங்கி $29

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jökulsárlón

Jökulsárlón is the best known and the largest of a number of gl

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Pukaki

Lake Pukaki is the largest of three roughly parallel alpine lakes

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Minnewater

Minnewater or Love Lake is a lake in the center of Bruges, Belgium

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Meiktila Lake

Lake Meiktila (Burmese: မိတ္ထီလာကန် ]) is a lake located near Meiktila

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dique do Tororó

O Dique do Tororó é o único manancial natural da cidade de Sa

ஒத்த எல்லா இடங்களையும் காண்க