நரகத்திற்கான கதவு

நரகத்திற்கான கதவு (Door to Hell)என வர்ணிக்கப்படும் இது, மத்திய ஆசியா நாடான துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இது, 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும். துருக்கிய மொழியில் காராகும் எனப்படும், கருப்பு மணல் பாலைவன பகுதியில் மெத்தேன் வாயுவை எடுக்கும் முயற்சியில் உருசியா விஞ்ஞானிகள் அதற்க்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்காக 230 அடி (70.104 மீ) சுற்றளவில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டனர். பணி நிறைவடையும் முன்பே 66 அடி (20.1168 மீ) ஆழ புதைகுழிபோல் உள்வாங்கி வாயுக்கள் கசியதுவங்கியதாகவும் வளிமண்டலத்தில் கொடிய மெத்தேன் வாயுக்கள் கலப்பதை தடுப்பதற்காக உருசியா விஞ்ஞானிகளே தீ மூட்டியதாகவும் எதிர்பாராதவிதமாக சுரங்கம் முழுவதும் தீப்பிடித்ததாக அறியப்படுகிறது.

புவியியல்

நரகத்திற்கான நுழைவாயில் என்றழைக்கப்படும் எரிவளி பெருங்குழி, தர்வாசா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது. இக்கிராமம் துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத்தின் வடக்கு மத்திய பகுதியில் சுமார் 260 கிலோமீட்டர் (160 மைல்கள்) தூரத்தில் உள்ளது. இங்கே காணப்படும் எரிவாயுவின் இருப்பு விகிதம் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாக கணிக்கப்படுகிறது. எரிவளி பள்ளத்திற்கு "நரகத்திற்கான கதவு" என்ற பெயரை உள்ளூர்வாசிகளால் வழங்கப்பட்டடுவதற்குக் காரணம், பாலைவன பிராந்தியத்தில் 70 மீட்டர்கள் (130 அடிகள்) விட்டமும், 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலம் கொண்ட பரபளவில் சுமார் 20 மீட்டர்(66 அடிகள்) ஆழத்தோடு மிகபிரமாண்ட பள்ளத்தாக்கில், இடைவிடாது தொடர்ந்து செம்மஞ்சள் நிறத்தில் தீச்சுவாலை உமிழ்ந்தபடி இருப்பதால் ஆகும்.

வரலாறு

1971 ஆம் ஆண்டு முதன்முதலாக, காராகும் பாலைவன பகுதியில் எண்ணெய் வயலென்று சோவியத் பொறியாளர்களால் அடையாளம் காணப்பட்டது. அது உண்மையில் ஒரு எண்ணெய் வயல் தளம்தான் என சந்தேகமடைந்தனர். பொறியாளர்கள் தேர்வு செய்த தளத்தின் அருகிலேயே கூடாரங்கள் அமைத்து, எண்ணெய் அளவை பரிசோதித்து மதிப்பீடு செய்ய துளையிடும் கருவிகள்கொண்டு துளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். துளையிட தொடங்கிய சிறிது நேரத்தில், முகாம்களின் கிழே பரந்த தரைபரப்பு உள்வாங்கி துளையிடும் கருவிகளும், மற்றும் கூடாரங்களும் சரிந்து மறைந்தது. பிறகுதான் பொறியாளர்கள் அறிந்தனர் எண்ணெய் வயலல்ல எரிவாயு காணப்படும் பகுதியென்பது.

அருகில் உள்ள நகரங்களின் குகைவழி நச்சுதன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியேறுவதாக நினைத்த பொறியாளர்கள் தீயிட்டு அணைத்துவிட முயன்றனர். தீயின் வீரியமறிந்த பொறியாளர்கள் இது சிறந்த எரிவாயு எனவும், அது சில வாரங்களில் எரிந்து அணைந்துவிடும் என மதிப்பிட்டார்கள். ஆனால் தீயிட்டதிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்தவாறே உள்ளது.

"டை ரையிங்" (Die Trying) என்ற தொலைக்காட்சித் தொடரில் காராகும் பாலைவன எரிவளி பள்ளம், "கிரேட்டர் அப் பயர்" (Crater of Fire) என்ற அத்தியாயத்துடன் காட்சிப்படுத்தியது. ஆய்வாளர் ஜார்ஜ் கௌரூனுஸ் என்பவர், எரிவளி பள்ளத்தின் அடிபாகத்தில் நுன்னுயிர் மாதிரிகளை சேகரிக்க முதன்முதலாக கால் பதித்தார். இந்த நிகழ்வின் அத்தியாயம் "தேசிய நிலவியல் தடம்" (National Geographic Channel) தொலைக்காட்சியில் 2014 ஆம் ஆண்டு சூலை 16 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்டது.

உப தகவல்கள்

  • துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன எரிவளி பள்ளத்திலிருந்து வெளியாகும் தீப்பிழம்புகள், மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வண்ண சுவாலைகளாகக் காணப்படுகின்றது.
  • 1971ல் ஏற்பட்ட எரிவளி பள்ள தீக்கங்குகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்தவாறே உள்ளதாக அறியப்படுகிறது.
  • காராகும் பாலைவன பள்ளம் பிரபல சுற்றுலா தளமாக மாறியுள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் (2014 இன்படி) 50,000 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
  • எரிவளி பள்ளம் மொத்த பரப்பளவு சுமார் 5,350 மீ², இது ஒரு அமெரிக்க காற்பந்து களத்தின் அளவாகும்.

சான்றுகள்

உப இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
cxbyte
12 September 2012
Сколько добра пропадает.
Hotel Asia Khiva

தொடங்கி $70

Omar Khayyam Hotel

தொடங்கி $55

Kukaldosh Boutique Hotel

தொடங்கி $45

Orient Star Khiva Hotel

தொடங்கி $60

Minorai-Kalon Hotel

தொடங்கி $120

Lyabi House Hotel

தொடங்கி $60

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Trolltunga

Trolltunga is a piece of rock that stands horizontally out of the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
White Cliffs of Dover

The White Cliffs of Dover are cliffs which form part of the British

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dune of Pilat

The Dune of Pilat (French: Dune du Pilat, official name), also called

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Balanced Rock

Balanced Rock is one of the most popular features of Arches National

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Loch Ard Gorge

The Loch Ard Gorge is part of Port Campbell National Park, Victoria,

ஒத்த எல்லா இடங்களையும் காண்க