இலாகூர் உயிரியல் பூங்கா

இலாகூர் உயிரியல் பூங்கா (Lahore Zoo) என்பது பாக்கித்தானின் பஞ்சாபில் இலாகூரில், 1872 இல் நிறுவப்பட்டது. இது பாக்கித்தானின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இது தற்போது பாக்கித்தான் அரசாங்கத்தின் வன, வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இன்று இதில் 135 இனங்கள் கொண்ட சுமார் 1378 விலங்குகளின் தொகுப்பு உள்ளது. இங்கு 2004 இல் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய உயிரியல் பூங்கா சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு மாநாடு நடைபெற்றது.

இது உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பழமையானதாக கருதப்படுகிறது. ஆஸ்திரியாவின் வியன்னா உயிரியல் பூங்கா, 1752 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1779 இல் ஒரு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. 1828 இல் நிறுவப்பட்ட இங்கிலாந்தின் இலண்டன் விலங்கியல் பூங்கா 1847 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட இந்தியாவின் அலிபூர் உயிரியல் பூங்கா 1876 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

வரலாறு

1872 ஆம் ஆண்டில் லால் மகேந்திர ராம் என்பவர் இலாகூர் மாநகராட்சிக்கு நன்கொடையாக ஒரு பறவைக் கூண்டினை வழங்கினார்.காலப்போக்கில் விலங்கு சேகரிப்பு அதிகரித்து மிருகக்காட்சி சாலை விரிவடைந்தது. இது பின்னர் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளை வழங்குவதோடு கூடுதலாக பாதுகாப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஆர்வம் காட்டத் தொடங்கியது. 2010 ஆம் ஆண்டளவில், மிருகக்காட்சிசாலையில் 71 இனங்கள் கொண்ட 1280 மரங்களும், 136 இனங்களைச் சேர்ந்த 1380 விலங்குகளும், 82 இனங்களின் 996 பறவைகளும், 8 இனங்களின் 49 ஊர்வனங்களும், 45 இனங்களின் 336 பாலூட்டிகளும் உள்ளன.

இதை இலாகூர் மாநகராட்சி 1872 முதல் 1923 வரை நிர்வகித்தது. பின்னர், நிர்வாகம் இலாகூரின் துணை ஆணையருக்கு மாற்றப்பட்டது. பின்னர் மேலாண்மை 1962 இல் கால்நடை மற்றும் பால் மேம்பாட்டுத் துறைக்கும், பின்னர் 1982 இல் வனவிலங்கு மற்றும் பூங்காக்கள் துறைக்கும் மாற்றப்பட்டது. 1872 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதற்கும் 1982 ஆம் ஆண்டில் வனவிலங்கு மற்றும் பூங்காக்கள் துறைக்கு அதன் வருவாய்க்கும் இடையில் மிருகக்காட்சிசாலையில் மிகக் குறைவான வளர்ச்சி இருந்தது. 1982 முதல், இது அதன் கண்காட்சிகள், தளவமைப்பு மற்றும் இயற்கையை ரசித்தல் ஆகியவற்றை மேம்படுத்தி, ஒரு சுய நிதி நிறுவனமாக மாறியுள்ளது.

2005 சூலை 25 இல் 18 மாத கால மிகப்பெரியத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இதை 'மிருகக்காட்சிசாலையின் பராமரிப்புக் குழு' நடத்தியது. பஞ்சாப் அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையால் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு சுமார் 202.830 மில்லியன் பாக்கித்தானிய ரூபாய் செலவாகும். மேலும் வசதிகளை மேம்படுத்துவதற்கும் சேர்ப்பதற்கும் இலக்காக இருந்தது.

பகுதிகள் மற்றும் ஈர்ப்புகள்

இதில் பிரதான நுழைவாயிலுக்கு கிழக்கே அமைந்துள்ள இது மிருகக்காட்சிசாலையின் மிகப் பழமையான பகுதியாகும். ஏனெனில் மிருகக்காட்சிசாலையே 1872 ஆம் ஆண்டில் பறவைக் கூடமாகத் தொடங்கியது. இது மிருகக்காட்சிசாலையின் பெரும்பாலும் காட்டுச் சேவல் மற்றும் கிளிகள் உள்ளன. இப்பகுதியில் நான்கு வரிசை இரட்டை பக்க பறவை கூண்டுகள் உள்ளன. அவை மயில், வான் கோழிகள், பஞ்ச வண்ணக்கிளி, புறாக்கள் மற்றும் சாம்பல் கிளிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கிளிகள் உள்ளன. இந்த பகுதியின் கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு வரிசையில் ஆசிய குள்ளநரிகள், ஆமைகள் மற்றும் பஸ்டார்ட் ஆகியவை உள்ளன. இதில் முதலைகள் தற்காலிகமாக வைத்திருக்கும் இடமாகவும் செயல்படுகிறது.

சிங்கங்கள் அமைவிடம்

முதலில் 1872 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, தற்போதைய சிங்கங்கள் அமைவிட வளாகம், 24,500 சதுர அடி பரப்பளவில் 1987 ஆம் ஆண்டில் 5.1 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது 2012 இல் புதுப்பிக்கப்பட்டது. இது உட்புற கூண்டுகளுடன் மூன்று கான்கிரீட் கட்டிடங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கட்டிடத்திலும் இரண்டு வெளிப்புற அடைப்புகள் உள்ளன. இந்த கட்டிடங்களில் முதலாவது மிருகக்காட்சிசாலையின் வங்காளப் புலிகளும், மலைச்சிங்கங்களும் உள்ளன . இதில் தற்போது பதினைந்து புலிகள் மற்றும் மூன்று மலைச் சிங்கங்களும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இங்கேயே பிறந்தவை. இரண்டாவது கட்டடத்தில், மூன்று உட்புற பெட்டிகளும் இரண்டு வெளிப்புற அடைப்புகளும் உள்ளன. இங்கு சிங்கங்களும் உள்ளன. 2015 முதல் 2016 வரை 13 சிங்கக் குட்டிகள் இங்கு பிறந்தன, தற்போது இங்கு 20க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன. மூன்றாவது மற்றும் இறுதி, கட்டிடம் மிருகக்காட்சிசாலையின் ஆசியக் கறுப்புக் கரடிகளின் குடும்பமாகும். இங்கு வசிக்கும் கறுப்புக் கரடி இணை 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது. இவை அனைத்தும் தற்போது இங்கேயே வசிக்கின்றன.

யானைகள் அமைவிட வளாகம்

இது, 1972 ஆம் ஆண்டில் 500,000 ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது மிருகக்காட்சிசாலையின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாகும். இது மூன்று பெரிய உட்புற அறைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அருகிலுள்ள வெளிப்புறத் திண்ணைகளைக் கொண்டுள்ளன. முதலில் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மூன்று ஆபத்தான பேச்சிடெர்ம் இனங்கள், ஆப்பிரிக்க சமவெளி யானை, தெற்கு வெள்ளை காண்டாமிருகம் மற்றும் பொதுவான நீர்யானை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூலை 2006 இல் ஒரு பெண் நீர்யாணை, (இராணி), இங்கு கொண்டு வரப்பட்டது. ஒரு ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது. 1988 ஆம் ஆண்டு முதல் இங்கு வசித்து வந்த சுஜி என்ற யானை, 2017 மே மாதம் இறந்து விட்டது. 1974 இல் இங்கு ஒரு ஆண் நீர்யானை (ராஜா) கொண்டுவரப்பட்டது. அக்டோபர், 2015 இல் தனது 51 வயதில் அது இறக்கும் போது, , மிருகக்காட்சிசாலையில் மிகப் பழமையான குடியிருப்பாளராக இருந்தது . நீர்யானையை இனப்பெருக்கம் செய்ய இதன் நிர்வாகங்கள் முயற்சித்தன. ஆனால் ராஜாவின் வயோதிகம் காரணமாக இவை தோல்வியடைந்தன. இங்கிருந்த ஒரு பெண் வெள்ளை காண்டாமிருகம், (காவோ), முதுமை காரணமாக 2014 இல் இறந்தது.

குரங்குகள் அமைவிடம்

மிருகக்காட்சிசாலையின் முந்தைய காலாவதியான குரங்கு அமைவிடத்தின் மீது 2012 இல் இது கட்டப்பட்டது. இந்த நான்கு புதிய அடைப்புகளும் மிருகக்காட்சிசாலையின் பிரதான நுழைவாயிலின் மேற்கே அமைந்துள்ளது. முதல் வளாகத்தில் மிருகக்காட்சிசாலையின் ஆலிவ் பபூன் குடும்பம் உள்ளது. இறுதி அடைப்பு வெர்வெட் குரங்குகளின் குடும்பத்திற்கு சொந்தமானது. அருகிலுள்ள அடைப்புகளில், முள்ளம்பன்றிகள், ஆமை மற்றும் ஒரு ஜோடி ஆற்று நீர்நாய் ஆகியவை உள்ளன . முன்பு இங்கு வைக்கப்பட்டிருந்த இனங்களில் கருங்கால் சாம்பல் குரங்குகளும், மாண்ட்ரில்களும், சிலந்தி குரங்குகளும் அடங்கும் .

சிம்பன்சிகளின் வளாகம்

மிருகக்காட்சிசாலையின் சிம்பன்சிகளின் தாயகமாக விளங்கும் இந்த கட்டிடத்தில் ஓநாய்கள், காட்டுப் பூனைகள் மற்றும் செம்முகக் குரங்குகள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் உள்ளன. மிருகக்காட்சிசாலையின் முதல் ஜோடி சிம்பன்சி, ஆண் (ரோமியோ) மற்றும் பெண் (ஜூலி) சிம்பன்சிகள் 1994 இல் கொண்டு வரப்பட்டது. ஒரு ஆண் சிம்பன்சி (டிங்கு) 2000 ஆம் ஆண்டில் இந்த இணைக்குப் பிறந்தது. ஆனால் செப்டம்பர், 2004 இல் நிமோனியா காரணமாக இறந்தது. ஆகத்து, 2001 இல், ஜூலி பிங்கி மற்றும் ஹனி என்ற மூன்று பெண் சிம்பன்சிகள் பிறந்தது. ரோமியோ 2008 இல் நிமோனியாவால் இறந்தது. ஜூலி 2012 இல் மன்ஞ்சல் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது. பிங்கி 2014 இல் இறந்தது. ஹனி மட்டுமே மிருகக்காட்சிசாலையில் எஞ்சியிருக்கும் ஒரே சிம்பன்சி ஆகும். இந்த கட்டிடம் சிறுத்தைகள், சிங்கங்கள் மற்றும் மலைச் சிங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பூனைகளுக்கு தற்காலிகமாக வைத்திருக்கும் இடமாகவும் செயல்படுகிறது. முன்னர் இங்கு வைக்கப்பட்டிருந்த இனங்கள் சிவிங்கிப்புலி மற்றும் பாபூன்கள் ஆகும்.

அருவி ஏரி

பறவைக் கூண்டிற்கு தெற்கே அமைந்துள்ள இந்த ஏரியில் பல்வேறு வகையான அருவிகளுகளும், பறக்கும் பறவைகளும் உள்ளன. இது மிருகக்காட்சிசாலையில் சில பழமையான மரங்களைக் கொண்ட நான்கு தீவுகளையும் கொண்டுள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள ஒரு ஆலமரம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகக் கூறப்படுகிறது. மிருகக்காட்சிசாலையின் இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள உயிரினங்களில் கறுப்பு அன்னம், மஸ்கோவி வாத்துகள், தடும்ப நாரைகள் மற்றும் தால்மேசிய கூழைக்கடாக்கள் ஆகியவையும் அடங்கும். இரண்டு காட்டுப்பன்றிகளைக் கொண்ட ஒரு சிறிய அடைப்பும் அருகிலேயே அமைந்துள்ளது.

ஊர்வன

இந்த மிருகக்காட்சிசாலையின் ஊர்வனவற்றில் பெரும்பாலானவை உள்ளன. அவற்றில் இந்திய நாகங்கள், சிந்து பாம்புகள், சுருட்டைவிரியன் மற்றும் இந்திய மலைப்பாம்புகள் ஆகியவை அடங்கும். 2006 ஆம் ஆண்டில் இது புதுப்பிக்கப்பட்டது. இது சிறந்த காற்றோட்டத்தையும், விலங்குகளுக்கான ஏர் கண்டிஷனிங்கையும் வழங்குகிறது. கினி எலிகள் போன்ற வில விலங்குகளையும் கொண்டுள்ளது. ஒரு சிறிய இறந்த பறவைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகம், முன்பு மிருகக்காட்சிசாலையில் வாழ்ந்த பல்வேறு வகையான விலங்குகளை காட்சிப்படுத்துகிறது.

சிம்பன்சித் தீவு

இது மிருகக்காட்சிசாலையின் சிம்பன்சியைக் கட்டியெழுப்ப முதலில் உருவாக்கப்பட்ட அருவி ஏரிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பெரிய அகழி உறை ஆகும். ஆனால் சிம்பன்சிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் இறப்பின் காரணமாக, இந்த அடைப்பில் தற்போது ஒரு ஜோடி இமயமலை பழுப்புக் கரடிகள் உள்ளன .

காட்டு ஆடுகள் குன்று

ஊர்வன ஆமைவிட வளாகத்தின் நுழைவாயிலுக்கு மேற்கே, வலதுபுறத்தில் அமைந்துள்ள இது இயற்கையாகவே உருவாக்கப்பட்ட ஒரு சிறிய மலையாகும். இது இரண்டு தனித்தனி அடைப்புகளில் வைக்கப்பட்டுள்ள காட்டு ஆடுகள் மற்றும் மௌப்ளோன்களின் தாயகமாகும் .

மற்றவைகள்

இங்கு காணப்படும் பிற குறிப்பிடத்தக்க விலங்குகளில் ஒட்டகச்சிவிங்கிகள், சதுப்புநில முதலைகள், புல்வாய்கள், நீலான்கள், சிவப்பு மான், இந்திய பன்றி மான், குவானக்கோகள், சமவெளி வரிக்குதிரை, தீக்கோழி, ஈமு மற்றும் தெற்கு காசோவரி, கழுகு கினிபோல் ஆகியவையும் அடங்கும்.

தாவரங்கள்

இங்கு 71 இனங்கள் கொண்ட சுமார் 1280 மரங்கள் உள்ளன. பல கவர்ச்சியான இனங்கள் கல்வியை மேம்படுத்த தகவல் பலகைகளைக் கொண்டுள்ளன. இவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • ஏழிலைப்பாலை - உள்ளூரில் டிட்டாபர்க் என்று அழைக்கப்படுகிறது - இந்தியா மற்றும் பாக்கித்தானை பூர்வீகமாகக் கொண்டது.
  • கோங்கு - உள்நாட்டில் சுன்பால் அல்லது பட்டு பருத்தி மரம் என்று அழைக்கப்படுகிறது - இமயமலைக்கு சொந்தமானது.
  • காலிஸ்டெமன் சிட்ரினஸ் - உள்ளூரில் பாட்டில் தூரிகை என்று அழைக்கப்படுகிறது - ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டது.
  • சிசே மரம் - உள்ளூரில் சிசம் என்று அழைக்கப்படுகிறது.- இந்தியா மற்றும் பாக்கித்தானில் வளரக்கூடியது.
  • செம்மயிற்கொன்றை - உள்ளூரில் குல்மோகர் என்று அழைக்கப்படுகிறது - மடகாசுகரை பூர்வீகமாகக் கொண்டது.
  • எரித்ரினா சுபெரோசா - உள்ளூரில் பவளம் அல்லது குல் நிஸ்டர் என்று அழைக்கப்படுகிறது - மியான்மரை பூர்வீகமாகக் கொண்டது.
  • ஆலமரம் - உள்ளூரில் பான்யான் என்று அழைக்கப்படுகிறது - வங்காளதேசத்தை பூர்வீகமாகக் கொண்டது.
  • அரச மரம் - உள்ளூரில் பைபல் என்று அழைக்கப்படுகிறது- இந்தியா மற்றும் பாக்கித்தானை பூர்வீகமாகக் கொண்டது.
  • மரச் சுரைக்காய் - உள்ளூரில் குல்-இ-பானூசு அல்லது தொத்திறைச்சி என்று அழைக்கப்படுகிறது - ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
  • இந்திய மா - உள்ளூரில் ஆம் என்று அழைக்கப்படுகிறது - இந்தியா மற்றும் பாக்கித்தானை பூர்வீகமாகக் கொண்டது
  • வகுளம் - உள்ளூரில் மோல்சரி என்று அழைக்கப்படுகிறது - பாக்கித்தானை பூர்வீகமாகக் கொண்டது
  • புங்கை - உள்ளூரில் சுக் செயின் அல்லது இந்திய பீச் எனவும் அழைக்கப்படுகிறது - இதன் பூர்வீகம் இமயமலை .
  • நாவல் மரம் - உள்ளூரில் ஜமு என்று அழைக்கப்படுகிறது - இந்தியா மற்றும் பாக்கித்தானை பூர்வீகமாகக் கொண்டது
  • இலந்தை - இமயமலை இதன் பூர்வீகமாகும்

வெளி இணைப்புகள்

  • பொதுவகத்தில் இலாகூர் உயிரியல் பூங்கா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Muhammad Asghar
6 March 2013
On sundays parking if full. So come early to get your vehicle parked in the parking. Otherwise you will have to park at your own risk. Somewhere on mall road.
Muhammad Asghar
6 March 2013
You can better opt to park your vehicle in lawrence garden and then come to lahore zoo by foot. Which almost very short distance from lawrence garde. Parking is free in lawrence garden.
Imran Lakhani
18 August 2013
The Zoo is ok, Animals like Rhino, Giraffe are not usual, so it's good to see those, but its very very crowdy and little un-managed.
Hozzi Khan
18 April 2013
For Families , The Lahore Zoo is happy place.........Particularly For Children..:)
yaSir
5 June 2012
You can find happy and playing animals if you visit early in the morning.
Kashif Mehmood Mughal
14 April 2014
Great place for kids entertainment and infotainment.
வரைபடம்
0.1km from Lahore Zoo, Jubilee Town, Lahore, Punjab 54000, பாக்கிஸ்தான் திசைகளைப் பெறுங்கள்

Lahore Zoo Foursquare இல்

இலாகூர் உயிரியல் பூங்கா Facebook இல்

Pearl Continental Lahore

தொடங்கி $161

Luxus Grand Hotel

தொடங்கி $95

GRAND MILLENNIUM HOTEL LAHORE

தொடங்கி $35

Hotel One The Mall Lahore

தொடங்கி $72

Safari hotel

தொடங்கி $37

The Residency Hotel

தொடங்கி $90

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Data Durbar Complex

Data Darbar (or Durbar), located in the city of Lahore, Pakistan is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Moti Masjid (Lahore)

Moti Masjid (Urdu موتی مسجد), one of the 'Pearl Mosques', is a 17th ce

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sheesh Mahal Lahore

The Sheesh Mahal (The Palace of Mirrors)[In Urdu شيون كا محل ] is loc

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Naulakha Pavilion

The Naulakha Pavilion is a prominent white marble personal chamber

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
இலாகூர் கோட்டை

இலாகூர் கோட்டை (Lahore Fort) உள்ளூரில் சாஹி கிலா (Shah

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மினார்-இ-பாக்கித்தான்

மினார்-இ-பாக்கித்தான் ( Minar-e-Pakistan, உருது: مینارِ پاکست

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சாலிமார் பூங்கா, இலாகூர்

சாலிமார் பூங்கா (Shalimar Gardens, பஞ்சாபி, உருது: شالیمار باغ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
வாகா

வாகா (Wagah, பஞ்சாபி: ਵਾਹਗਾ, இந்தி: वाघा) இந்தியாவிற்கும் பா

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Yokohama Zoo

Asahi-ku (旭) is one of the 18 wards of the city of Yokohama in K

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Edogawa Ward Natural Zoo

Edogawa City Natural Zoo (江戸川区自然動物園, Edokawaku-shizen-

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Busch Gardens Tampa Bay

Busch Gardens at Tampa Bay is a 335-acre 19th century African-themed

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Henry Doorly Zoo

The Omaha's Henry Doorly Zoo is a zoo in Omaha, Nebraska, located at

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lincoln Park Zoo

Lincoln Park Zoo is a free Шаблон:Convert zoo located in Lincoln Park

ஒத்த எல்லா இடங்களையும் காண்க