சாட் ஏரி

சாட் ஏரி (பிரெஞ்சு: Lac Tchad) என்பது தோராயமாக 1,350 சதுர கிமீ உடைய ஏரியாகும். இவ்வேரி சகாரா பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள இது ஆழம் குறைந்த நிலத்தால் சூழப்பட்ட நன்னீர் ஏரியாகும். இது வடிகால்கள் அற்ற மூடப்பட்ட ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி சாட், நைசீரியா, நைசர், கேமரூன் ஆகிய நாடுகள் உள்ளன. இதன் பரப்பளவு பல் வேறு காலகட்டங்களில் மாறி மாறி இருந்துள்ளது. 1960 முதல் 1998 வரையான காலங்களில் இவ்வேரி 95% சுருங்கியது. ஆனால் 2007இல் செயற்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் முந்தைய ஆண்டுகளை விட ஏரி குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேறியுள்ளதை காட்டுகிறது. இவ்வேரி இதனை சுற்றியுள்ள 68 மில்லியன் மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் பொருளாதாரத்தில் சிறப்பு பங்கு வகிப்பதாகவும் உள்ளது. சாட் வடிநிலத்துள்ள பெரிய ஏரி இதுவேயாகும்.

மேலும் காண்க

புவியியல்

சாட் ஏரியின் பெரும்பகுதி சாட் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ளது. சாரி ஆற்றின் மூலம் இவ்வேரி 90% விழுக்காடு நீரைப் பெறுகிறது சிறு அளவு நீர் நைசர், நைசீரியா எல்லை வழியாக பாயும் யோபே ஆற்றின் மூலம் கிடைக்கிறது. இதன் நீர் அதிக அளவு நீராவியாக வெளியேறினாலும் இது நன்னீர் ஏரியாக உள்ளது. இவ்வேரியின் பாதி சிறு சிறு தீவுகளாக உள்ளது. இதன் எல்லை ஈர புல்வெளி நிலமாகவுள்ளது.

ஏரி ஆழம் குறைந்தது. அதிகபட்ட ஆழம் 10.5 மீட்டராகும். ஒவ்வொரு காலங்களிலும் ஏரியின் பரப்பளவு வேறுபடும். கால்வாய், ஆறு என்று இதிலுள்ள நீர் வெளியேற வாய்ப்பற்ற இது மூடப்பட்ட ஏரியாகும். நீர் ஆவியாவதின் வழியாகவும் போடேலே என்ற தூசு புயல் மூலமாகவும் இதன் நீர் வெளியேறுகிறது இடமாறுகிறது.. இதன் காலநிலை ஆண்டின் பெரும்பாலான சமயங்களில் வறண்டதாகும். யூலை முதல் செப்டம்பர் மாதத்தில் சிறிது அளவு மழை இருக்கும்.

வரலாறு

இந்த ஏரியின் பெயராலயே சாட் நாடு அழைக்கப்படுகிறது. சாட் என்பது உள்ளூர் சொல்லாகும் இதற்கு அகண்ட நீர் அதாவது ஏரி என்று பொருள். இது பழக்கால நிலத்தால் சூழப்பட்ட கடலின் எச்சம். கிமு 5,000 வாக்கில் இருந்த நான்கு பழங்கால ஏரிகளில் இதுவே பெரியதாகும். 1 மில்லியன் சதுர கிமீ பரப்பளவு உடையதாக இருந்ததாக நம்பப்படுகிறது. இது தற்போது உள்ள காசுப்பியன் கடலை விட பெரிதாகும்.மாயோ கெப்பி ஆறு இந்த ஏரியில் தோன்றியதாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் மாயோ கப்பி ஆறு நைசர் ஆற்றுடனும் இணைந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இவ்வேரியை இணைத்தது . ஆப்பிரிக்க மாண்டீசுகள் சாட் ஏரிப்பகுதிக்கு நீர் வரும் பாதையில் உள்ளதே இதற்கு ஆதாரமாகும்.

1823இல் சாட் ஏரி முதன் முறையாக ஐரோப்பியர்களால் கரையிலிருந்து அளவிடப்பட்டது. அப்போது இதுவே உலகின் மிகப்பெரிய ஏரியாக கருதப்பட்டது. 1851இல் செருமானிய தேடலாய்வாளர் லிபியாவின் திரிப்போலியிலிருந்து சகாரா பாலைவனம் வழியாக படகை ஒட்டகம் மூலம் கொணர்ந்து படகு மூலம் இவ்வேரியை அளவிட்ட முதலாமர் ஆவார். சகாரா பாலைவனத்தை அளவிட்ட பிரித்தானிய அதிகாரி சேம்சு ரிச்சர்ட்சன் இவ்வேரியை அடையும் சில நாட்களுக்கு முன் உயிரை விட்டார்.

1899இல் வின்சன்ட் சர்ச்சில் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் (The River War: An Account of the Reconquest of the Sudan) சாட் ஏரி சுருங்குவதை குறித்துள்ளார்.

மேற்கோள்கள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
சாட் ஏரி க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Ledger Plaza Hotel N'Djamena

தொடங்கி $233

Novotel N Djamena La Tchadienne

தொடங்கி $201

Hilton NDjamena Africa

தொடங்கி $213

Ibis N'Djamena La Tchadienne

தொடங்கி $128

Mercure N Djamena Le Chari

தொடங்கி $126

Radisson Blu Hotel, N'Djamena

தொடங்கி $167

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Waza National Park

Waza National Park (French: Parc national de Waza) is a national park

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Sevan

Lake Sevan (Հայերեն. Սևանա լիճ) is the largest lake in Armenia and on

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Tahoe

Lake Tahoe is a large freshwater lake in the Sierra Nevada mountains

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Biwa

, formerly known as Ōmi Шаблон:Nihongo Lake, is the largest freshw

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dillon Reservoir

Dillon Reservoir, sometimes referred to as Lake Dillon, is a large

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
செனீவா ஏரி

ஜெனீவா ஏரி (பிரெஞ்சு: Lac Léman, Léman, இடாய்ச்சு: Genfersee) ச

ஒத்த எல்லா இடங்களையும் காண்க