எல் எசுக்கோரியல்

பொதுவாக எல் எசுக்கோரியல் (El Escorial) என அறியப்படும் சான் லோரென்சோ டெ எல் எசுல்லோரியல் அரச களம் என்பது, இசுப்பெயினின் தலைநகரமான மாட்ரிட்டில் இருந்து 45 கிலோமீட்டர் தென்மேற்குத் திசையில் உள்ள சான் லோரென்சோ டி எல் எசுக்கோரியல் என்னும் நகரத்தில் அமைந்துள்ள, இசுப்பெயின் அரசரின் வாழிடம் ஆகும். அரச களமான இது, துறவிமடம், பசிலிக்கா, அரச மாளிகை, பந்தியன், நூலகம், அருங்காட்சியகம், பல்கலைக்கழகம், பள்ளி, மருத்துவமனை எனப் பலவாறாகப் பயன்பட்டுள்ளது. இது எல் எசுக்கோரியல் நகரத்தில் இருந்து 2.06 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

எல் எசுக்கோரியல் பெரும் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கட்டிடத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று அரச துறவிமடம், மற்றது முன்னதில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள லா கிரஞ்சில்லா டி லா பிரெசுனேடா எனப்படும் அரச வேட்டைக்கான தங்குமிடமும் துறவிகள் வெளியே தங்குவதற்கான இடத்தையும் உள்ளடக்கியது. இந்தக் களங்கள் இரட்டைத் தன்மை வாய்ந்தவை. அதாவது, 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் பல இடங்களில், இசுப்பானிய அரச அதிகாரமும், இசுப்பெயினின் உரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கமும் ஒரே கட்டிடக்கலை வெளிப்பாட்டைக் காட்டி நின்றன. ஏல் எசுக்கோரியல் ஒரு காலத்தில் அரசமாளிகையாகவும், துறவிமடமாகவும் செயற்பட்டது. இது முன்னர் செயின்ட் செரோம் சபைக் குருமாரின் சொத்தாக இருந்த இது இப்போது செயின்ட் அகசுத்தீன் சபையினரின் துறவிமடமாக உள்ளது. இது "பன்னிரண்டாம் அல்போன்சோ அரச கல்லூரி" எனப்படும், மாணவர்கள் தங்கிக் கல்வி பயிலும் ஒரு பள்ளியாகவும் உள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எதிர் வினையாக இசுப்பெயினின் இரண்டாம் பிலிப்பு, தனது நீண்ட ஆட்சிக் காலத்தின் (1556–1598) பெரும் பகுதியையும், அள்ள அள்ளக் குறையாததுபோல் தோன்றிய புதிய உலகில் இருந்து கிடைத்த செல்வத்தின் பெரும் பகுதியையும் இந்த மாற்ற அலையைத் தடுத்து நிறுத்துவதற்காகப் பயன்படுத்தினார். இவரது தொடர்ச்சியான முயற்சிக்கு நீண்ட காலத்தில் பகுதியாக வெற்றி கிடைத்தது எனலாம். ஆனாலும், இந்த உத்வேகம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே, எல் எசுக்கோரியல் தொகுதியைக் கட்டுவதற்கு பிலிப்பு முடிவு செய்தபோதே, வெளிப்பட்டது.

எல் எசுக்கோரியலை வடிவமைப்பதற்கு, யுவான் பௌட்டிசுத்தா டி தொலேடோ என்னும் கட்டிடக்கலைஞரை பிலிப்பு பணிக்கு அமர்த்தினார். யுவான் பௌட்டிசுத்தா உரோமிலும், நேப்பிள்சிலும் கழித்தார். உரோமில் இருந்த போது சென் பீட்டர் பசிலிக்காவின் கட்டிட வேலைகளில் பணியாற்றியுள்ளார். நேப்பிள்சில் அவர் அரசப் பிரதிநிதியின் கீழ்ப் பணிபுரிந்தார். இந்த அரசப் பிரதிநிதியின் பரிந்துரையினாலேயே பௌட்டிசுத்தா அரசரின் கவனத்தை ஈர்த்தார். பிலிப்பு 1559 இல், பௌட்டிசுத்தாவை அரச கட்டிடக்கலைஞராகப் பணிக்கு அமர்த்தினார். கிறித்தவ உலகத்தின் மையம் என்ற இசுப்பெயியின் வகிபாகத்துக்கான நினைவுச் சின்னமாக எல் எசுக்கோரியலை இருவரும் சேர்ந்து வடிவமைத்தனர்.

1984 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி, எல் எசுக்கோரியலின் சான் லோரென்சோவை ஒரு உலக பாரம்பரியக் களமாக யுனெசுக்கோ அறிவித்தது. இது இப்போது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். மாட்ரிட்டில் இருந்து ஒரு நாள் சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் இங்கே வருகிறார்கள். ஆண்டுக்கு 500,000 பேர் எல் எசுக்கோரியலைப் பார்க்க வருகின்றனர்.

வெளி இணைப்புகள்

கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
S P
21 June 2019
Really worth a visit. One of the many wonderful historical places in Spain. Half a day to visit the monastery, library, church and Palace, followed by a stroll and lunch near the Ajumento. An A++ day!
Iouri Pereltsvaig
9 September 2014
The library, the altar, 2 crucifixion sculptures by Bernini and Chellini, The last supper by Titian, 2 large pictures by Bosch, and one by Patinir make it a world class museum for art lovers.
Gabriel Pereda
16 August 2015
It has very nice view from any point. And also it is very easy and practical to get there. Mad the way from the train station is verry nice. The food at any restaurant is very good.
Rolando Ando/chefcito
11 February 2017
10 euros el acceso, no dejan tomar fotos sólo en los exteriores, impresionante el monasterio, pero no dejes de recorrer sus jardines externos, son preciosos, cierran a 6pm. Ve con tiempo!
Eduardo Moreno Calero
5 August 2013
El Panteón de Reyes así como el resto del Monasterio (excepto la parte de clausura) se puede visitar con o sin guía.La entrada normal es 10€,reducido de 5€ para estudiantes menores de 25 años.PRECIOSO
Pensar En Psicología
30 May 2018
La arquitectura e historia no tienen comparación, se requiere todo el día para disfrutar todo el recorrido, vale la pena sin la menor duda.
Exe Victoria Palace

தொடங்கி $104

Miranda & Suizo

தொடங்கி $70

Hotel Florida

தொடங்கி $52

Sercotel Hotel Los Lanceros

தொடங்கி $47

Posada Don Jaime

தொடங்கி $70

Hospedería Santa Cruz

தொடங்கி $42

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Valle de los Caídos

The Valle de los Caídos (in English: Valley of the Fallen) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
New Castle of Manzanares el Real

The New Castle of Manzanares el Real, also known as Castle of los

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சார்சுவேலா அரண்மனை

சார்சுவேலா அரண்மனை (español. Palacio de la Zarzuela, Шаблон:IPA

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Royal Palace of Riofrío

The Royal Palace of Riofrío (español. Palacio Real de Riofrío) is on

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Royal Palace of El Pardo

The Royal Palace of El Pardo (Spanish: Palacio Real de El Pardo) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bulls of Guisando

The Bulls of Guisando (Spanish: Toros de Guisando) are a set of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
La Granja palace

The Royal Palace of La Granja de San Ildefonso is an 18th century

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Royal Palace of La Granja de San Ildefonso

The Royal Palace of La Granja de San Ildefonso (Spanish: Palacio Real

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
தடுக்கப்பட்ட நகர்

தடுக்கப்பட்ட நகர் (ஆங்கிலம்: Forbidden City; சீனம

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
வெர்சாய் அரண்மனை

வெர்சாய் அரண்மனை அல்லது வேர்சாய் அரண்மனை (Palace of Versailles, i

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெனா தேசிய அரண்மனை

பெனா தேசிய அரண்மனை (Pena National Palace; போர்த்துக்கீசம்: Pa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அல்கம்பிரா

அல்கம்பிரா (Alhambra) என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெ

ஒத்த எல்லா இடங்களையும் காண்க