செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை)

புனித ஜார்ஜ் கோவில் (St. George’s Cathedral) என்பது முன்னாள் ஆங்கிலிக்கன் சபை, இந்நாள் தென்னிந்தியத் திருச்சபையின் சென்னை மறைமாவட்ட முதன்மைக் கோவில் ஆகும். இக்கோவில் 1815ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம்

இக்கோவிலின் வரலாறு சென்னை நகரோடும் இந்தியாவோடும் இணைந்த கிறித்தவ வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. ஆங்கிலிக்கன் சபை, மெதடிஸ்டு சபை, பிரெஸ்பிட்டேரியன் சபை மற்றும் கான்ங்ரகேஷனல் சபைகள் ஒன்றிணைந்து தென்னிந்தியத் திருச்சபை என்னும் ஒன்றிப்புச் சபை இக்கோவிலில்தான் 1947, செப்டம்பர் மாதம் தொடங்கியது. அப்போது நடந்த நிகழ்ச்சியில் இக்கோவில் நிரம்பி வழிந்ததோடு, வெளியே எழுப்பப்பட்ட பந்தலில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தனர். உலக அளவிலேயே பல திருச்சபைகள் ஒன்றிணைந்து ஒன்றிப்பு முயற்சியைத் தொடர இந்தத் திருச்சபை ஒன்றிப்பு வழிகோலியது.

கட்டடத்தின் சிறப்புகள்

புனித ஜார்ஜ் கோவிலின் கோபுரம், தூண்கள், பளிங்குச் சிலைகள், சுவர் ஓவியங்கள், நினைவுக் கல்லறைகள் போன்றவை அதற்குச் சிறப்பாக அமைந்துள்ளன. பரந்து விரிந்த ஒரு படிக்கட்டில் ஏறி, கோவிலுக்குள் நுழையலாம். தலைசிறந்த கலையழகோடும் கட்டட நுணுக்கத்தோடும் அமைந்த இக்கோவிலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பிரித்தானிய காலத்தில் ஆட்சி செய்த ஆளுஞர்கள் தம் குடும்பத்தோடு வழிபாட்டில் பங்கேற்றனர். அதுபோலவே, அரசுப் பதிலாள்கள் (Viceroys) சென்னைக்கு வருகைதந்த போது அங்கு வழிபட்டனர்.

கோவில் வரலாறு

இக்கோவில் 1815ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டடத்தை எழுப்ப மக்களே நிதி உதவி அளித்தார்களாம். இதைக் கட்டிமுடிக்க அக்காலத்தில் 41,709 பொற்காசுகள் (பகோடாக்கள் - pagodas) செலவாயின. கோவிலின் உள்ளே செய்யப்பட்ட மரவேலைகள், குழலிசைக் கூடம் (pipe organ), கட்டடக் கலைஞருக்கு அளிக்கப்பட்ட ஊக்கவூதியம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் மொத்த செலவு 57,225 பொற்காசுகள். ஒரு பொற்காசு (பகோடா) இந்திய ரூபாய் மதிப்பில் 3.50 என்று கணக்கிடப்படுகிறது.

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் மூத்த கட்டடக் கலைஞர் கர்னல் J. L. கால்டுவெல் (Col. J. L. Caldwell) கோவில் கட்டடத்தின் முன்வரைவை ஆக்கினார். துணைக் கட்டடக் கலைஞர் தே ஹாவில்லாண்ட் (Captain De Havilland) கோவில் கட்டடத்தை நிறைவுக்குக் கொணர்ந்தார். இவரே சென்னையில் அமைந்த மற்றொரு புகழ்மிக்க வழிபாட்டுத் தலமாகிய புனித அந்திரேயா கோவிலையும் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் வசதியாக அமைந்திருக்கும் இடம் சத்திரப் பாக்கம் (Choultry Plain) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானியர் அக்கோவிலில் 1815இலிருந்தே வழிபட்டாலும், 1816, சனவரி 6ஆம் நாளில்தான் கல்கத்தாவின் முதல் ஆங்கிலிக்க பேராயர் மேதகு தாமஸ் ஃபேன்ஷா மிட்டில்டன் (Rt. Rev. Thomas Fanshaw Middleton) அக்கோவிலை "இங்கிலாந்து திருச்சபையின் மரபுக்கு ஏற்ப இறைபணி நிகழ்த்த" அர்ச்சித்தார்.

சென்னை ஆங்கிலிக்க/தென்னிந்தியத் திருச்சபை பேராயர்கள்

  • Rt. Rev. Daniel Corrie 1835-1837
  • Rt. Rev. George John Trevor Spencer 1837-1849
  • Rt. Rev. Thomas Dealtry 1849-1861
  • Rt. Rev. Frederick Gell 1861-1899
  • Rt. Rev. Henry Whitehead 1899-1922
  • Rt. Rev. Edward Harry Mansfield Waller 1923-1941
  • Rt. Rev. Arthur Michael Hollis 1942-1954
  • Rt. Rev. Dr. David Chellappa 1955-1964
  • Rt. Rev. Lesslie Newbigin 1965-1974
  • Rt. Rev. Dr. Sundar Clarke 1974-1989
  • Rt. Rev. Dr. Masillamani Azariah 1990-1999
  • Rt. Rev. Dr. V. Devasahayam 1999-

புனித ஜார்ஜ் கோவில் தலைமைப் பாதிரிமார்

  • Rev. Clarence Edwin Brett 1947
  • Rev. John Murdoch Wallace 1947-1948
  • Rev. Robert Leslie Watson 1948-1958
  • Rev. E.J.M. Wyld & Rev. R.L. Manson 1957-1958
  • Rev. Ian Matheson Calvert 1959-1962
  • Rev. David Max Samuel 1962-1964
  • Rev. Sundar Clarke 1964-1969
  • Rev. Eugene Paul Heideman 1969-1970
  • Rev. Ebenezer Immanuel 1970-1975
  • Rev. Swamiappan David 1975-1980
  • Rev. Christopher Solomon 1980-1984
  • Rev. R. Trinity Baskeran 1984-1985
  • Rev. D. Amos Manoharan 1985-1990
  • Rev. David Devairakkam 1990-1995
  • Rev. Oliver T. Arockiam 1995-1999
  • Rev. N.G. Mathew 1999-2003
  • Rev. Dr. Noel Jason 2003-2006
  • Rev. D.C. Premraj 2006-2011
  • Rev. Immanuel 2011-

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Bharanidharan Giridharan
20 April 2014
One of the calmest places in chaotic chennai life !. Check the grave yard. One of the oldest preserved one in the world.
Blesson Densil
23 May 2013
Calmful place.. Place to see past history
வரைபடம்
+91 44 2811 4261, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086, இந்தியா திசைகளைப் பெறுங்கள்

St. George's Cathedral Foursquare இல்

செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை) Facebook இல்

Taz Kamar Inn

தொடங்கி $35

BKR Grand Hotel

தொடங்கி $43

Aadvik Sai Residency

தொடங்கி $23

Orion Guest House

தொடங்கி $18

Nachiappa Park Hotel

தொடங்கி $32

Mala Inn

தொடங்கி $30

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சென்னை சாந்தோம் தேவாலயம்

சாந்தோம் பசிலிகா இந்தியாவின் சென்னையில் சாந்தோ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்னை

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிஷ்கிந்தா

கிஷ்கிந்தா (Kishkinta) என்பது தமிழ்நாட்டின் சென்னையில்  உள்ள ஒ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball) (வான் இறைக்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மாமல்லபுர மரபுச்சின்னங்கள்

மாமல்லபுர மரபுக்கோயில்கள் அ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சதீஸ் தவான் விண்வெளி மையம்

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் (Satish Dhawan Space Ce

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
உப்பலமடுகு நீர்வீழ்ச்சி

உப்பலமடுகு நீர்வீழ்ச்சி (தடா அருவி , கம்பகம் அருவி) இது இந்தியாவின்

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மாலகா பெருங்கோவில்

மாலகா பெருங்கோவில் (Cathedral of Málaga) என்பது மறுமலர்ச்சிக் கால

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அவிலா பெருங்கோவில்

அவிலா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Ávila) என

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Como Cathedral

Como Cathedral (italiano. Cattedrale di Santa Maria Assunta; Duomo di

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
San Salvador Cathedral

The Metropolitan Cathedral of the Holy Savior (Catedral Metropolitana

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Segovia Cathedral

Segovia Cathedral is a Roman Catholic religious church in Segovia,

ஒத்த எல்லா இடங்களையும் காண்க