மீ சன்

மீ சன் (வியட்நாமிய உச்சரிப்பு: [mǐˀ səːn]) வியட்நாம் நாட்டில் உள்ள பண்டையக்கால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும். மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ கிராமத்திற்கு அருகில் உள்ளது. இரு மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இரு கிமீ அகலமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இக்கோயில்கள் உள்ளன. சம்பா அரசர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகவும், அரச பரம்பரையினர் மற்றும் பெரும் வீர்ர்களின் நினைவிடமாகவும் இருந்துவந்துள்ளது. சமச்கிருதம் மற்றும் சம் மொழி கல்வெட்டுகள், 70 இக்கும் மேற்பட்டக் கோயில்கள் ஒருகாலத்தில் இங்கு இருந்தன. ஆனால், வியட்நாம் போரின்போது இவற்றில் பெரும்பாலனவை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அழிந்துபோயின. 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

வரலாறு

70 இக்கும் மேற்பட்ட கோயில்கள், கல்லறைகளைக் கொண்ட மீ சன்னின் காலக்கட்டம், 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரை எனக் கருதப்படுகிறது. எனினும், சில இடிபாடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் நான்காம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவையாக உள்ளன. டோங் டுவாங் நகரை தலைநகராகக் கொண்ட பண்டையக்கால சம்பா அரசின், கலாச்சார மற்றும் சமய புனிதத் தலைநகராக மீ சன் விளங்கியிருக்கூடும்.

பத்ரவர்மனும் பத்ரேச்வரரும்

மீ சன்னில் கிடைத்துள்ள ஆதாரத்தின்படி பத்ரவர்மன் (380-413), பத்ரவேச்வரன் சிவாலயத்தை அமைத்தார். சிவன் இங்கு லிங்க வடிவில் உள்ளார். மீ சன் பள்ளத்தாக்கு முழுமையையும் இவ்வாலயத்திற்கு அர்பணிப்பதாக பத்ரவர்மன் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளார். சம்புவர்மன் பத்ரவர்மன் மறைவிற்கு இரு நூறாண்டுகள் கழித்து நெருப்பினால் பத்ரவேச்வரன் சிவாலயம் அழிவுற்றது. ஏழாம் நூற்றாண்டில், அரசர் சம்புவர்மன் (577-629) ஆலயத்தைப் புதுப்பித்து சம்பு-பத்ரவேச்வரன் என்று சிவலிங்கத்தை மறுநிர்மாணம் செய்தார். சம்புவர்மன் ஆட்சிக்காலத்தில் கி.பி. 605 இல், சீனத்தளபதி லீய் ஃபாங் சாம் நாட்டின்மீது படையெடுத்தார். சாம் பெரிதும் அழிவுற்றது. ஆனால், திரும்பிச் செல்லும்வழியில் கொள்ளை நோய்க்கு லீய் ஃபாங் உட்பட பெரும்பாலோனர் மாண்டனர் 20 ஆம் நூற்றாண்டு ஆய்வாளர்களால் கட்டிடக்கலையின் அற்புதம் என வர்ணிக்கப்பட்ட இவ்வாலயம் வியாட்நாம் போரின்போது அமெரிக்கக் குண்டுவீச்சில் முற்றிலும் அழிந்தது. தற்போது ஒரு செங்கற்குவியலே மிஞ்சியுள்ளது.

பிரகாசதர்மன்

பிரகாசதர்மன் (653-687), விகராந்தவவர்மன் என்ற பெயரில் அரியணை ஏறினார். தெற்கே அரசை விரிவுபடுத்தினார். சிவலிங்கங்களுக்கு கோசா எனும் உலோகக் கவசங்கள் வழங்கப்பட்டது. இவர் சிவன் மட்டுமல்லாது திருமாலையும் வழிபட்டார். 657 இல் இவர் நிறுவிய கல்வெட்டின் மூலம் சம்பா அரசர்களின் வம்ச மரபை அறிய முடிகிறது.

பிற்காலம்

அடுத்தடுத்த அரசர்கள் பழையக் கோயில்களை புதுப்பித்ததுடன், புதிய கோயில்களையும் நிர்மாணித்தனர். பின்வந்த பல நூற்றாண்டுகளுக்கு, மத்திய வியட்நாமின் கலாச்சார மற்றும் சமய புனிதத் தலைநகராக மீ சன் விளங்கியது. ஈசனபத்ரேச்வரா உள்ளிட்ட பல கோயில்கள் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. கி.பி.1243 இல் ஐந்தாம் செய இந்திவர்மன் சில திருப்பணிகள் செய்துள்ளார். 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாம் அரசு, வியட் அரசிடம் மீ சன் உள்ளிட்டப் பகுதிகளை இழந்தது. தற்காலத்திய ஆய்வுகள் மத்திய வியட்நாமை வியட் கைப்பற்றியதும் சாம்பா அரசு வீழ்ந்தது. 1898 இல் பிரெஞ்சு ஆய்வாளர் எம்.சி.பாரிச் கண்டுபிடிக்கும்வரை, மீ சன் முற்றிலும் கைவிடப்பட்டிருந்தது.

மறுசீரமைப்பு

1937-1938 இல் சில சிறு கோயில்கள் மறுசீரமைக்கப்பட்டன. 1939-1943 இல் பெரிய கோயில்கள் மறுசீரமைக்கப்பட்டன. 1969 இல் வியாட்நாம் போரின்போது அமெரிக்கக் குண்டுவீச்சில் இவை அழிந்தன. சில சிலைகள் பிரான்சு, வியாட்நாம் அருங்காட்சியகங்களில் உள்ளன.

கட்டிடமைப்பு

இவை பெரும்பாலும் செங்கற்கட்டிடங்களாகும். சுடப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டனவா அல்லது கட்டப்பட்டப் பிறகு மொத்தமாகக் கட்டிடம் சுடவைக்கப்பட்டதா என்ற சர்ச்சை நிலவுகிறது. வேலைப்பாடுகள் தனியாகச் செய்து செருகப்படாமல், செங்கல் அமைப்பு கட்டி முடிவுற்றதும், அச்செங்கல்மீதே செதுக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு கால கட்டிடங்கள் வெவ்வேறு பாணியில் உள்ளன.

கல்வெட்டுகள்

சமச்கிருதம் மற்றும் சம் மொழியில் கல்வெட்டுகள் தனியான கற்பலகை, கற்தூண்களில் எழுதி நிறுவப்பட்டுள்ளன. இந்திய வரிவடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Sean Wang
29 September 2017
A must go, for observing the ancient architecture that built by Champa people, who are not extinct, it is best to join a tour, you can sign up from your hotel, bring an umbrella, it rains a lot.
Ilya
14 April 2016
A bombed down Angkor brother-in-law. Worth the visit, but avoid bus tours-rent a scooter, plan the arrival after 2pm, and you'll avoid the tourists and the heat. But still don't forget water and hats.
Jas
17 August 2014
One of the largest and oldest archeologic sites of Vietnam, UNESCO World Heritage. Come very early in the morning (from 5am) to enjoy the Cham temples with a beautiful light and less or no crowd.
Michel Kao
8 December 2013
Make sure you visit the museum too, since it contains a large picture of the A1 tower,which was destroyed during the American-Vietnam War.
Nikos B
13 August 2017
Come here early (start from your hotel at 5am) to avoid crowds and heat!! Enjoy some amazing Champa dynasty ruins!
Petr Necesal
23 December 2014
Must see! Do not ask for a organized trip from Hoi An. Rent a scooter and drive there by yourself. Interesting local places and life to be seen...
Ebisu Onsen Resort

தொடங்கி $62

Hoi An Reverie Villas

தொடங்கி $23

Gateway Inn Hoi An Villa

தொடங்கி $21

Aquarium Villa

தொடங்கி $38

Riverside Pottery Village

தொடங்கி $10

Terra Cotta Homestay and Hostel

தொடங்கி $6

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Da Nang International Airport

Da Nang International Airport (IATA: DAD, ICAO: VVDN) (Vietnamese:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Han River Bridge

Han River bridge is in Da Nang, Vietnam. Danang lies on the west side

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ho Chi Minh Museum

The Ho Chi Minh Museum is located in Hanoi, Vietnam. It is a museum

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
L'Anse aux Meadows

L'Anse aux Meadows (pronounced ; from the French

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tsodilo

Tsodilo is a UNESCO World Heritage Site located in northwestern

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ta' Ħaġrat Temples

The Ta' Ħaġrat temple in Mġarr, Malta is recognized as a UNESCO Wo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
White Mosque (Ramla)

The White Mosque (Arabic: المسجد الأبيض‎ Masjid al-Abyad, Heb

ஒத்த எல்லா இடங்களையும் காண்க