கிளிமஞ்சாரோ மலை

மேலும் காண்க
கிளிமஞ்சாரோ மலை

<tr><td style="border-top:1px solid #999966; text-align: center;" colspan=2>300px
கிளிமஞ்சாரோவில் கிபோ முகட்டின் உச்சி</td></tr>

உயரம் 5,895 மீட்டர்கள் (19,340 அடி)
அமைவிடம் 22px டான்சானியா

<tr><td style="border-top: 1px solid #999966; border-right: 1px solid #999966; background: #e7dcc3; width: 85px">தொடர்</td><td style="border-top: 1px solid #999966; width: 220px">தொடரல்ல. தனிமலை</td></tr><tr><td style="border-top: 1px solid #999966; border-right: 1px solid #999966; background: #e7dcc3; width: 85px">சிறப்பு</td><td style="border-top: 1px solid #999966; width: 220px">5,895 மீ தனிமலை உயரத்தில் முதன்மை</td></tr><tr><td style="border-top: 1px solid #999966; border-right: 1px solid #999966; background: #e7dcc3; width: 85px">ஆள்கூறுகள்</td><td style="border-top: 1px solid #999966; width: 220px">03°04′33″S 37°21′12″E / -3.07583, 37.35333அமைவு: 03°04′33″S 37°21′12″E / -3.07583, 37.35333</td></tr><tr><td style="border-top: 1px solid #999966; border-right: 1px solid #999966; background: #e7dcc3; width: 85px">கடைசி வெடிப்பு</td><td style="border-top: 1px solid #999966; width: 220px">பதிவான வரலாற்றில் இல்லை</td></tr><tr><td style="border-top: 1px solid #999966; border-right: 1px solid #999966; background: #e7dcc3; width: 85px">முதல் ஏற்றம்</td><td style="border-top: 1px solid #999966; width: 220px">அக்டோபர் 6, 1889 யோகானஸ் கின்யாலா லௌவோ (Yohanas Kinyala Lauwo), ஹான்ஸ் மேயர் (Hans Meyer), லூடுவிக் புர்ட்ஷெல்லர் ( Ludwig Purtscheller)</td></tr><tr><td style="border-top: 1px solid #999966; border-right: 1px solid #999966; background: #e7dcc3; width: 85px">சுலப வழி</td><td style="border-top: 1px solid #999966; width: 220px">மலைவழி நடத்தல் (மலைநடை)</td></tr>

கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' [1] என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும்.

மலை அமைப்பு

இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. கிளிமஞ்சாரோவின் உகரு முகட்டிற்கு முதன்முதலாக அக்டோபர் 6, 1889 அன்று, மராங்கு (Marangu ) படைத்துறையைச் சேர்ந்த யோகானஸ் கின்யாலா லௌவோ (Yohanas Kinyala Lauwo) என்பவரின் துணையோடு டாய்ட்ச் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் மேயர் (Hans Meyer), ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த லூடுவிக் புர்ட்ஷெல்லர் ( Ludwig Purtscheller) ஆக மூவரும் ஏறி வரலாறு படைத்தனர். கிபோவைத் தவிர மற்ற இரு பெரும் எரிமலை முகடுகளாகிய மாவென்சி ((5,149 மீ, 16,890 அடி), சிரா (3,962 மீ, 13,000 அடி) ஆகியனவும் அடங்கிவிட்ட எரிமலைகள்தாம். மாவென்சி ஆப்பிரிக்காவிலேயே மூன்றாவது உயரமான மலை (கென்யா மலை இரண்டாவது உயரமான மலை).

மலையின் பெயர்

வெண்பனி மூடிய கிபோ மலை உச்சி. வானில் இருந்து எடுத்த படம் இம்மலைக்குக் கிளிமஞ்சாரோ என்னும் பெயர் எப்பொழுது யாரால் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஐரோபியர் இப்பெயரை 1860 ஆம் ஆண்டளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சுவாகிலி மொழியில் "கிளிமா" (Kilima ) என்றால் குன்று (சிறுமலை) என்று பொருள் என்றும் "ஞ்சாரோ" (Njaro) என்றால் பழைய சுவாகிலி மொழியில் வெள்ளை" "பளபளப்பான" என்று பொருள் என்றும் [2] கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் இது சுவாகிலி மொழிச்சொல் அல்ல என்றும், கிச்சகா மொழியில் ஜாரோ (jaro) என்றால் பயணம் செல்லும் தொடர் (caravan) என்றும் பல்வேறு விதமாகக் கூறுகின்றனர். சிறுமலை அல்லது குன்று என்று பொருள்படும் கிளிமா என்னும் பெயர் எப்படி இப்பெரிய மலைக்கு முன்னொட்டாக வந்தது என்று இவ்விளக்கங்கள் தெளிவு படுத்துவதில்லை. கிச்சகா மொழியில் கிளிமஞ்சாரே அல்லது கிளிமஜ்யாரோ (kilemanjaare or kilemajyaro) என்னும் சொற்கள் "பறவையை, சிறுத்தையை, பயணத்தொடர் வரிசையைத் தோற்கடிக்கும்" ("which defeats the bird/leopard/caravan") என்று பொருள்படும் என்கிறார்கள், ஆனால் ஐரோப்பியர்கள் 1850களில் இங்கு வரும் முன்னர், கிச்சகா மொழியினர் அப்பெயரைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்கள்[3]

1880களில் இம்மலை டாய்ட்ச் மொழியில் கிலிமண்ட்ஷாரோ (Kilimandscharo) என்று அழைக்கப்பட்டது. கார்ல் பீட்டர்ஸ் என்னும் டாய்ட்ச் நாட்டவர் இப்பகுதி மக்களின் தலைவர்களிடம் பேசி இம்மலையை டாய்ட்ச் நாட்டினரின் கிழக்கு ஆப்பிரிக்கக் குடியாட்சியின் (காலனியின்) பகுதியாக ஆவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார். 1889இல் கிபோ மலையில் உள்ள உகுரு முகட்டை கெய்சர் வில்ஹெல்ம் ஸ்பிட்ஸெ (Kaiser-Wilhelm-Spitze) என்று பெயரிட்டு டாய்ட்ச் பேரரசின் ஆவணங்களில் 1918 ஆம் ஆண்டுவரை பயன்படுத்தி வந்தனர். 1918 இல் பிரித்தானியர் இப்பகுதியை டாய்ட்ச்சு நாட்டினரிடம் இருந்து வென்று கைமாறிய பின் அப்பெயர் கைவிடப்பட்டது.

Mount Kilimanjaro - with Landsat Overlay. Heights two times exaggerated.

தற்போதைய நிலைமைகள்

தட்பவெப்ப நிலைகள்

இம்மலையின் உட் புறத்தில் எரிமலை அடங்கிப் போனாலும், இதன் மேற்பரப்பில் நிகழ்வன உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இம்மலையின் உச்சியில் இருந்த அண்மைக்காலப் பனியாறுகள் பின்வாங்கியுள்ளன. மலையுச்சிப் பனிக்கட்டிகளின் கனவளவு 80% க்கு மேல் குறைந்துவிட்டது. இப் பனிக்கட்டிகள் உருகி எப்போது முற்றாகவே இல்லாமல் போகும் என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 2002 ஆம் ஆண்டில் ஓஹியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்தட்பவெப்பவியலாளர் லோனீ தாம்சன் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இம்மலையின் உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2015க்கும் 2020க்கும் இடையில் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. 2007 இல் ஆய்வு நடத்திய ஆஸ்திரிய அறிவியலாளர் குழுவொன்று உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2040 ஆம் ஆண்டளவிலேயே மறையும் என்கின்றனர். சில பகுதிகளிலுள்ள வானிலை காரணமாக மலைச் சரிவின் சில பகுதிகளில் பனிக்கட்டிகள் மேலும் சில காலத்துக்கு இருக்கும் என அவர்கள் மதிப்பிடுகிறார்கள். கலிபோர்னியா அறிவியல் அக்கடமியின் ஆய்வுகள் உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2050 ஆம் ஆண்டிலேயே இல்லாமல் போகும் என்கின்றன.

எரிமலைசார் நிலைமைகள்

இது செயற்பாடற்றதாக இருப்பினும் கிளிமஞ்சாரோவின் முதன்மைக் கொடுமுடியான கிபோவில் வளிமங்களை வெளிவிடும் புகைத்துளைகள் (fumaroles) காணப்படுகின்றன. கொடுமுடியில் அமைந்துள்ள எரிமலைவாய்ப் பகுதியில் 400 மீட்டர்களுக்குக் கீழ் பாறைக்குழம்பு உள்ளதாக 2003ல் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். முற்காலத்தில் பல நிலச்சரிவுகளும், உடைவுகளும் கிபோவில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

நிலப்படம்

கிளிமஞ்சாரோவின் முந்திய நிலப்படம் 1963 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசின் கடல்கடந்த நில அளவை இயக்ககத்தினால் வெளியிடப்பட்டது. இவை 1958 ஆம் ஆண்டளவில் அரச வான் படையினால் எடுக்கப்பட்ட வான்படங்களை (air photography) அடியொற்றியவை. 1:50,000 அளவுத்திட்டத்துக்கு வரையப்பட்ட இப்படங்கள் 100 அடி வேறுபாட்டுடனான உயரக்கோடுகளைக் (contours) கொண்டுள்ளன. இந்த நிலப்படங்கள் தற்போது கிடைப்பதில்லை. சுற்றுலாத்துறைக்கான நிலப்படம் முதன் முதலாக 1989 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை. 1990ல் இன்னொரு நிலப்படம் சுற்றுலாத்துறைத் தகவல்களுடன் வெளியிடப்பட்டது, இது 1:75,000 அளவுத்திட்டத்தில், 100 மீட்டர் வேறுபாட்டுடனான உயரக்கோடுகளுடன் அமைந்திருந்தது. இதில் முறையே 1:20,000, 1:30,000 ஆகிய அளவுத்திட்டங்களில் உள்ளீடாக கிபோ, மாவேன்சி ஆகியவற்றின் நிலப்படங்கள் இருந்தன. இந்த நிலப்படம் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்பியல் அம்சங்கள்

கிளிமஞ்சாரோ மலை உலகின் மிக]பெரிய பல்லடுக்கு எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இது எரிமலைக் குழம்பு, எரிமலைத் தூசிப் படிவு, எரிமலைச் சாம்பல் ஆகியவற்றின் பல படைகளால் அமைந்தது. எரிமலைத் தூசிப் படிவுகள் எரிமலை வெடிப்பின்போது வளிமண்டலத்தில் கலந்து பின்னர் படிவுற்றவை. எனவே இது காணப்படுவது ஒருகாலத்தில் கிளிமஞ்சாரோவில் எரிமலை இயக்கமுள்ளதாக இருந்ததைக் காட்டுகிறது. இருந்தாலும், அறியக்கூடிய அண்மைக் காலத்தில் எரிமலை வெடிப்பு ஏற்படவில்லை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் பல மில்லியன் ஆண்டுகளாக இம்மலை செயலற்ற நிலையிலேயே இருப்பதாகக் கருதலாம்.

கிளிமஞ்சாரோ மலை கூம்பு எரிமலை வடிவம் கொண்டது. இது எரிமலைவாயூடாக எறியப்பட்ட பொருள்களினால் உருவானது. இவ்வாறான வெளிப்படு பொருட்கள் எரிமலை வாயைச் சுற்றிக் கூம்பு வடிவில் குவிந்ததன.

மலையேறும் பாதைகள்

Forest along the Marangu climbing route. Tanzania's Deputy Minister for Foreign Affairs with a guide at the summit.

கிளிமஞ்சாரோ மலைமீது ஏற ஏற்புபெற்ற பல மலைவழிகள் உள்ளன. அவையாவன: There are several routes officially sanctioned for climbing Kilimanjaro. These are:

  • மச்சாமே (Machame) [4] [5]
  • மாரங்கு (Marangu) [6] [7]
  • ரோங்கை (Rongai) [8] [9]
  • லெமோஷோ அல்லது லண்டோரோசி லெமோஷோ (Londorossi Lemosho)[10] [11]
  • உம்புவே (Umbwe )[12] [13]
  • சிரா (Shira) [14] [15]
  • இம்வேக்கா (Mweka) (descent only) [16]

இவற்றுள் "மச்சாமே" சிறந்த காட்சியமைப்புக் கொண்டதும் சரிவு கூடியதுமான பாதையாகும். "ரோங்கை", "மராங்கு" ஆகியவை இலகுவான பாதைகள். ஆனால் இப்பாதைகளில் தங்குமிட வசதிகள் குடிசைகளாகும். ஏறுவது இலகுவானதால் இப் பாதைகள் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ளன. இங்கே ஏறுவதும் இறங்குவதும் ஒரே வழியே.

கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இது பற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். நுட்ப நோக்கில் ஏறுவது இலகுவானாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவது கடினமானதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளல் மிகவும் அவசியமானதாகும். எனினும் பலர் நோய்வாய்ப்படுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இந் நோயால் மலையேறுவோர் 10 பேர்வரை இறக்கிறார்கள். இவர்களுடன் உதவிக்குச் செல்லும் உள்ளூர் மக்களையும் சேர்த்து 10-20 பேர் வரை இறப்பதாகச் சொல்லப்படுகிறது. மலையேறும் எல்லோருமே ஓரளவு வசதிக்குறைவு, மூச்சுவிடக் கடினமாக இருத்தல், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" கொடுமுடியை அடைகிறார்கள். குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.

மலையேறுவோர் கிளிமஞ்சாரோ மலையில் செலவுசெய்யும் ஒவ்வொரு நாளுக்கும் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பாக தான்சானிய அதிகார அமைப்புக்களை உயர் மலைகளில் ஏறுவோர் சங்கங்கள் விமர்சித்துள்ளன. இப்போக்கு, செலவுகளைக் குறைப்பதற்காக மலையேறுவோர், புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொள்ளத் தூண்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கிளிமஞ்சாரோவில் ஏறுவது இலகு என எண்ணிக்கொண்டு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதையிட்டு அங்குள்ள தான்சானிய மருத்துவ சேவை அலுவலர்கள் கவலையடைந்துள்ளனர். இவ்வாறு வரும் பலருக்கு குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள், தான்சானியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மலையேறும் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளத் தூண்டப்படுவதாகவும், அதற்குத் தேவையான உடற்தகுதிகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவது இல்லை எனவும் தெரிவிக்கின்றன.

தாவர வகைகள்

கிளிமஞ்சாரோவில் நீரைத் தேக்கும் முட்டைக்கோசு வகைத் தாவரங்களை உட்படுத்திய, பல தனித்துவமான தாவர வகைகளை டுசொக் புல்வெளிப் பகுதிகளில் காணலாம். இவையனைத்தும் ஆல்ப்ஸ் காலநிலைக்குப் பழக்கப்பட்டவை. கிளிமஞ்சாரோ பலவிதமான காட்டுவகைகளை 3000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் கொண்டுள்ளது. இக் காடுகளில் 1200க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த vascular தாவரங்கள் காணப்படுகின்றன.

விலங்குகள்

கிளிமஞ்சாரோ மலைப் பகுதியில் பல்வேறு பறவைகளையும் விலங்குகளையும் காணலாம். இவற்றுள் கட்டைவிரலற்ற கொலோபசுக் குரங்கு, நால்வரி எலி, குங்குரு எனப்படும் வெண்கழுத்துக் காக்கை, எலும்புண்ணிக் கழுகு, பல்வகை மலைக்குருவிகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

பகுப்பு:தான்சானியா பகுப்பு:ஆப்பிரிக்க மலைகள் பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்

<span id="interwiki-fr-fa" />

am:ኪሊማንጃሮ an:Kilimanjaro ar:جبل كيليمانجارو ast:Kilimanjaro az:Kilimancaro bat-smg:Kėlėmandžars be:Гара Кіліманджара be-x-old:Кіліманджара bg:Килиманджаро bn:কিলিমাঞ্জারো bs:Kilimandžaro ca:Kilimanjaro cs:Kilimandžáro cy:Kilimanjaro da:Kilimanjaro de:Kilimandscharo dv:ކިލިމަންޖާރޯ ފަރުބަދަ el:Κιλιμάντζαρο en:Mount Kilimanjaro eo:Kilimanĝaro es:Kilimanjaro et:Kilimanjaro eu:Kilimanjaro fa:کلیمانجارو fi:Kilimanjaro fr:Kilimandjaro ga:Cilimeaindearó gd:Kilimanjaro gl:Kilimanjaro he:קילימנג'רו hif:Mount Kilimanjaro hr:Kilimandžaro hu:Kilimandzsáró id:Kilimanjaro is:Kilimanjaro it:Kilimanjaro ja:キリマンジャロ jv:Kilimanjaro ka:კილიმანჯარო kk:Килиманджаро ko:킬리만자로 산 kw:Kilimanjaro lb:Kilimanjaro lmo:Kilimangiaro lt:Kilimandžaras lv:Kilimandžāro mk:Килиманџаро ml:കിളിമഞ്ചാരോ കൊടുമുടി mn:Килиманжаро mr:माउंट किलीमांजारो nds:Kilimandscharo nl:Kilimanjaro (berg) nn:Kilimanjaro no:Kilimanjaro om:Kilimanjaro os:Килиманджаро pl:Kilimandżaro pms:Kilimangiaro pnb:کلیمنجارو pt:Kilimanjaro rm:Kilimandscharo ro:Kilimanjaro ru:Килиманджаро sh:Kilimanjaro simple:Mount Kilimanjaro sk:Kilimandžáro sl:Kilimandžaro sq:Kilimanxharo sr:Килиманџаро sv:Kilimanjaro sw:Kilimanjaro (mlima) tet:Kilimanjaru th:ยอดเขาคิลิมันจาโร tl:Kilimanjaro tr:Kilimanjaro Dağı uk:Кіліманджаро ur:کلیمنجارو vec:Kilimanjaro vi:Núi Kilimanjaro war:Bukid Kilimanjaro zh:乞力马扎罗山

  1. "உகுரு" அல்லது "உஃகுரு" என்பது Uhuru என்று கிழக்கு ஆப்பிரிக்க மொழியாகிய கிசுவாகிலி மொழியில் உள்ள சொல். அதன் பொருள் விடுதலை அல்லது நாட்டு விடுதலை என்று பொருள். தற்பொழுது ஆங்கிலத்திலும் இச்சொல் ஏற்றுக்கொண்ட சொல் (1950களில் ஏற்றுக்கொண்ட சொல்). இங்கே பார்க்கவும்)
  2. "Kilima-Njaro" (alternate name in 1907), The Nuttall Encyclopædia, 1907, FromOldBooks.com, 2006, webpage: FOB-Njaro.
  3. http://www.ntz.info/gen/b00769.html
  4. http://7summits.com/kilimanjaro/machame.php
  5. http://www.climber.org/TripReports/2004/1390.html
  6. http://7summits.com/kilimanjaro/marangu.php
  7. http://www.ultimatekilimanjaro.com/routes#marangu
  8. http://7summits.com/kilimanjaro/rongai.php
  9. http://www.ultimatekilimanjaro.com/routes#rongai
  10. http://7summits.com/kilimanjaro/shira-machame.php
  11. http://www.ultimatekilimanjaro.com/routes#lemosho
  12. http://7summits.com/kilimanjaro/umbwe-breach.php
  13. http://www.ultimatekilimanjaro.com/routes#umbwe
  14. http://www.footprint-adventures.co.uk/itinkms.html
  15. http://www.ultimatekilimanjaro.com/routes#shira
  16. http://gorp.away.com/gorp/location/africa/tanzania/hik_kil2.htm
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Shah Tours
3 January 2018
Kilimanjaro. The name itself is a mystery wreathed in clouds. It might mean Mountain of Light, Mountain of Greatness or Mountain of Caravans. http://www.shah-tours.com/
Dennis Willibard
9 August 2018
Kilimanjaro is freestanding mountain in the world, there are 3 peaks which Shira plateau, Mawenzi and Kibo. http//:www.steptokili.com
The Most Interesting Man in the World
Sherpas are heavier than I thought.
@JaumePrimero
3 July 2013
Did you know that Mount Kilimanjaro is a dormant volcano? Don't let that stop you from making the ascent. Do it!
Ian Hartmann
9 July 2011
Tallest in Africa, a national park, waterfalls and other great attractions to start off or try out at it's foot before climbing.
Andrea
28 June 2014
Went with karibu adventures company and they were great. We made it to the top. Pole Pole! ????
Fri 24 Hours
Sat 7:00 AM–3:00 PM
Sun 8:00 AM–9:00 AM
Mon 10:00 AM–11:00 AM
Tue 7:00 AM–3:00 PM
Wed 10:00 AM–11:00 AM

Mount Kilimanjaro Foursquare இல்

கிளிமஞ்சாரோ மலை Facebook இல்

Salinero Hotels - Millie Lodge Machame

தொடங்கி $35000

Weru Weru River Lodge

தொடங்கி $210

Salinero Hotel - Kilimajaro

தொடங்கி $35000

Kilimanjaro Wonders Hotel

தொடங்கி $130

Osy Grand Hotel

தொடங்கி $40

Kaliwa Lodge

தொடங்கி $99

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ngorongoro Conservation Area

The Ngorongoro Conservation Area or NCA is a conservation area

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Çamlıca Hill

Çamlıca Hill (Turkish: Çamlıca Tepesi), aka Big Çamlıca Hill (Turk

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Üetliberg

The Üetliberg (also spelled Uetliberg, pronounced Шаблон:IPA in Zür

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Top of Mt. Takao (高尾山頂)

Top of Mt. Takao (高尾山頂) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Mounta

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gellért Hill

Gellért Hill (magyar. Gellért-hegy; Deutsch. Blocksberg; Latina. M

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lysá hora

Lysá hora (Czech pronunciation: ]; Polish: Łysa Góra; German: Lys

ஒத்த எல்லா இடங்களையும் காண்க