கண்டிஜா

கண்டிஜாக் கோயில் கண்டிஜா (Ggantia) என்பது மத்தியதரைக் கடற் பகுதியில் உள்ளதும் மால்டா நாட்டின் ஒரு பகுதியும் ஆகிய கோசோத் தீவில் அமைந்துள்ள ஒரு புதியகற்காலக் கோயில் ஆகும். புதியகற்காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அமைப்புக்கள் தொடர்பில் இத் தீவிலுள்ள இரண்டு கண்டிஜாக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இக் கோயில்கள் கி.மு 3600-2500 ஆண்டுகள் காலப்பகுதியில் அமைக்கப்பட்டவை. 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக் கோயில்கள், உலகின் மிகப்பழைய தனித்து நிற்கும் அமைப்பும், மிகப்பழைய சமயம் சார்ந்த அமைப்பும் ஆகும். இவை எகிப்தின் பிரமிட்டுக்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன் ஹெஞ்ச் ஆகியவற்றை விடப் பழமையானவை. இக் கோயில்கள் செழுமையியற் சடங்குகள் (Fertility Cult) சார்ந்த தாய்க் கடவுளுக்கு உரியவை எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல சிலைகளும், உருவங்களும் இத்தகைய சடங்குகளுடன் தொடர்பு உள்ளவை என நம்பப்படுகின்றது.

மால்ட்டா மொழியில், கண்டிஜா என்பது "பூதங்களுக்கு உரியது" என்னும் பொருள் கொண்டது. உள்ளூரில் நிலவும் கதைகளின்படி இக்கோயில்கள் பண்டைக்காலத்தில் இத்தீவில் வாழ்ந்த பூதங்களால் கட்டப்பட்டவை ஆகும். இக் கோயில்கள் அப்பூதங்களால் காவல் கோபுரங்களாகப் பயன்படுத்தப்பட்டன எனவும் அக்கதைகள் கூறுகின்றன.

அமைப்பு

இன்னொரு கண்டிஜாக் கோயில் இக் கோயில்கள் குளோவர் இலை வடிவம் கொண்டவை. சுவர்கள் சைக்கிளோப்பிய முறையில் அடுக்கப்பட்ட கல் முகப்புக்களுக்கு இடையே உடைகற்கள் நிரப்பி அமைக்கப்பட்டவை. இக் கோயில்கள் ஒவ்வொன்றும் நடுவில் அமைந்த கூடமொன்றுடன் இணைக்கப்பட்ட அரைவட்ட மாடங்களைக் கொண்டவை. இம் மாடங்கள் முற்காலத்தில் கற்களால் அமைந்த குவிமாடக் கூரைகளால் மூடப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. சில்லுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலும், இரும்புக் கருவிகள் மால்டாவில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அறிமுகம் இல்லாது இருந்ததுமான ஒரு காலத்தில் கட்டப்பட்டதனாலும் இக்கோயில்கள் வியக்கத் தக்கவையாக இருக்கின்றன. இங்கு சிறிய கோள வடிவக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் கோயில்களைக் கட்டுவதற்கான பாரிய கற்களை நகர்த்துவதற்கு இக் கோள வடிவக் கற்கள் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

வடிவமைப்பு

கண்டிஜா பெருங்கற் சின்னங்களில் விரிவுத் தோற்றம் இங்குள்ள கோயில்களில் தென்பகுதியில் உள்ள கோயிலே மிகப் பழமையானதும், பெரியதும் ஆகும். இது ஏறத்தாழ கி.மு 3600 ஆண்டுகளைச் சேர்ந்தது. மால்ட்டாவில் உள்ள பிற பெருங்கற் களங்களைப் போலவே இக் கோயிலும் தென்கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக் கோயில் 6 மீட்டர்கள் உயரமானது. இதன் வாயிலில் குழிவுடன் கூடிய பெரிய பாறையொன்று காணப்படுகின்றது. கோயிலுக்குள் நுழைவதற்குமுன் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு இடமாக இது இருக்கலாமெனச் சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.

விலங்குகளின் எலும்புகள் பல இங்கிருந்து கண்டு எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே விலங்குகள் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற விலங்குகளின் சிற்பங்கள் இங்கே காணப்படுவதால், இவ் விலங்குகள் இங்கே பலி கொடுக்கப்பட்டன என்று கருதலாம்.

அகழ்வாய்வு

கண்டிஜாக் கோயில்கள் கோசோவின் ஆளுனராக இருந்த கர்னல் ஜோன் ஒட்டோ பேயர் (John Otto Bayer) என்பவரால் 1827 ஆம் ஆண்டில் அகழ்வாய்வு செய்யப்பட்டது.[1][2][3] எனினும் இவர் கோசோவில் இருந்து திரும்பிய பின்னர், இக் கோயில்கள் முறையாகப் பேணப்படாமல் குப்பைகளால் நிரம்பின. 1980 ஆம் ஆண்டிம் இக் கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் என அறிவிக்கப்பட்ட பின்னரே முறையாக மீளமைப்பு வேலைகள் தொடங்கின.

வெளியிணைப்புக்கள்

அமைவிடம்: 36°03′00″N, 14°16′08″E பகுப்பு:புதியகற்காலக் கட்டிடக்கலை

cs:Ġgantija de:Ġgantija en:Ġgantija eo:Ĝgantija es:Ġgantija fa:جگانتیا fr:Ġgantija lb:Tempele vu Ggantija lt:Džgantija mt:Ġgantija nl:Megalithische tempels van Ġgantija nn:Ġgantija no:Ġgantija pl:Ġgantija pt:Ġgantija ru:Джгантия sh:Ggantija sl:Ġgantija

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Jon B
17 December 2015
One of the most well-maintained sites in Malta. It's small, but worth a visit, as long as you have an imagination that can help you see beyond the pile of rocks.
Kat Yuiofthesun
28 November 2014
Not the largest neolithic site on the Maltese Islands, it is a must see when visiting Gozo. The exhibition is lovingly curated &the site itself well administered between presentation& preservation.
Petri Aukia
22 February 2017
The temples are very, v very interesting and the site is in good enough shape to be worth a visit. Large rooms, humongous stones and tons of questions.
Richard Leeming
30 March 2016
It's old... Perhaps the oldest temple.. Use your imagination and read up on the history before going.. New information centre is ok but had limited indepth info about the temple..
Alex Dobyan
14 July 2015
It is pretty interesting, and they recently added a new museum that is worth the walk-through.
Geert Van Lent
16 June 2022
Quite impressed with the atmosphere. If not too many people are around, get some contemplating in. We are not do different from 6000 years ago
Cornucopia Hotel

தொடங்கி $104

GIZIMINA 2

தொடங்கி $0

Mariblu Hotel

தொடங்கி $70

Ellie Boo Bed & Breakfast

தொடங்கி $104

Casa Patricia

தொடங்கி $0

Dar Guzeppa

தொடங்கி $0

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ta' Kenuna Tower

Ta' Kenuna Tower is one of three semaphore towers built by the British

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cathedral of the Assumption, Gozo

The Cathedral of the Assumption is a Roman Catholic cathedral in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cittadella (Gozo)

The Cittadella (Maltese: Iċ-Ċittadella), also known as the Citadel, t

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Old Prison

The Old Prison is located in the Citadel of Victoria, Gozo, adjacent

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wied il-Mielah Window

Wied il-Mielah Window – most skalny, który powstał przez wpływy środ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Inland Sea, Gozo

The Inland Sea, sometimes called Qawra in Maltese, is a lagoon of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
St. Mary's Tower

St. Mary's Tower (Maltese: it-Torri ta' Santa Marija) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Azure Window

The Azure Window (Malti. 'Tieqa Żerqa') is a Limestone natural arch

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Temple of Athena Nike

Nike means 'victory' in Greek, and Athena was worshiped in this form,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் (acropolis, கிரேக்க மொழி: Ακρόπολις) என்பது பண்டைக்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pasargadae

Pasargadae (فارسی. پاسارگاد) the capital of Cyrus the Great (559-5

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Copán

The Pre-Columbian city today known as Copán is a locale in western

ஒத்த எல்லா இடங்களையும் காண்க