மயோன் எரிமலை

மயோன் எரிமலை (Mayon Volcano, தகலாகு: மொழியில் புல்காங்கு மயோன்) அல்லது புல்கான் மயோன் அல்லது மயோன் சிகரம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது உயிர்துடிப்புடைய எரிமலை ஆகும். இது பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ளது. இது "முழுமையான கூம்பு" எனப் புகழ்பெற்ற எரிமலையாகும். ஏனெனில் அது கிட்டத்தட்ட சமச்சீரான கூம்பு வடிவத்தில் உள்ளது. இந்த மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் ஜூலை 20, 1938 இல், நாட்டின் முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் மயோன் எரிமலை இயற்கை பூங்கா என வகைப்பாடு செய்யப்பட்டு மயோன் எரிமலை தேசியப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் காண்க

உள்ளூர் நாட்டுப்புறவியல் தகவலின்படி தாராகாங் மகயோன் என்ற புகழ்பெற்ற நடிகையின் பெயரே இந்த எரிமலைக்கு வைக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது.

அமைவிடம்

பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தின் முக்கிய நிலக்குறியீடாக மயோன் எரிமலை அமைந்துள்ளது. அல்பே வளைகுடா கடற்கரையில் இருந்து 10 கி.மீ (96.2 [மைல்கள்]) தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 2456 மீட்டர் (8077 அடி) உயரம் உடையது. இந்த எரிமலை புவியியல் ரீதியாக லெகாஸ்பி, தாரகா, கேமலிக், குயினோபதான், லிகாவ் டபாகொ, மலிலிபாட் மற்றும் டோமிங்கோ ஆகிய எட்டு நகரங்கள் மற்றும் நகராட்சிகளால் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது (லகாஸ்பியில் இருந்து வலப்பக்கமாக). மேலே இருந்து பார்க்கும் போது இந்த நகரங்கள் மயோன் எரிமலையை ஒரு பை (pie) என்ற உணவுப்பண்டத்தினை கூம்புவடிவத் துண்டுகளாக பிரித்துள்ளது போலத் தோன்றுகிறது.

புவியியல் பரிமாணம்

மயோன் ஒரு சிறிய மத்திய உச்சிப் பள்ளம் கொண்ட உன்னதமான சுழல்வடிவ (கலப்பு) வகைபாட்டின் கீழ் வரும் எரிமலையாகும். உலகின் சிறந்த சமச்சீர் வடிவமுடைய எரிமலை கூம்பாக இது கருதப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் அரிப்புகளின் போது எரிமலையிலிருந்து வெளிவந்த அலைகள் மற்றும் எரிமலைக்குழம்பு வெளியேற்றத்தின் காரணமாக அடுக்குகளாக படிந்ததன் காரணமாக தோன்றியது. மேல் உச்சியிலிருந்து சராசரியாக 35-40 கோணங்களில் சரிவாக இது உள்ளது.

பசிபிக் பெருங்கடலை சுற்றி அமைந்துள்ள மற்ற எரிமலைகள் போலவே, மயோன் எரிமலையும் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

முக்கிய வெடிப்புகள்

பிலிப்பைன்சு நாட்டின் மிக தீவிரமான உயிர்ப்பு எரிமலையான மயோன் கடந்த 400 ஆண்டுகளில் 49 முறை வெடித்துள்ளது. பிப்ரவரி 1616 இல் ஒரு பெரிய வெடிப்பு ஏற்ப்பட்டது. உலகச்சுற்றுப்பயணம் செய்த டச்சு ஆய்வாளர் ஜோரிஸ் வேன் ஸ்பில்பெர்கன் இந்த வெடிப்பினை பதிவு செய்தார். இந்த எரிமலையில் ஜூலை 20, 1766 அன்று ஆறு நாட்கள் தொடர்ச்சியாக சீற்றம் நிகழ்ந்த பதிவும் உள்ளது.

1814 வெடிப்பு

மயோனின் மிக நாசகரமான வெடிப்பு 1814 பிப்ரவரி 1 அன்று ஏற்பட்டது (VEI=4). இருப்பினும் எரிமலைக்குழம்பு வெளியேற்றம் 1766 வெடிப்பை விட குறைவாக இருந்தது. எரிமலையிலிருந்து வெளிவந்த கருஞ்சாம்பல் மற்றும் பாறைக்குழம்புகள் கக்ஸாவா என்ற நகரத்தை மூடியது. மரங்கள் கருகின ; ஆறுகள் சேதமடைந்தன. அண்மைப்பகுதிகள் 9 [மீட்டர்] (30 அடி) ஆழத்திற்கு சாம்பலால் மூழ்கடிக்கப்பட்டன. அலபேயில் 2200 மக்கள் இந்த எரிமலை வெடிப்பால் இறந்த நிகழ்வு மயோன் வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாகும்.

1881–1882 வெடிப்பு

1881 ஜூலை 6 முதல் ஆகத்து 1882 வரை வலுவான வெடிப்பு (VEI=3) ஒன்றை மயோன் கண்டது. இந்த எரிமலை சீற்றம் தொடங்கி ஐந்து மாதங்களுக்கு பின்னர் 1881 இல் நத்தார் நாளன்று சாமுவேல் நீலாண்ட் என்ற ஒரு இயற்கையியல் மற்றும் புவியியல் பேராசிரியர் தனிப்பட்ட முறையில் கண்டுபிடித்தார்.

1897 வெடிப்பு

மயோன் எரிமலையின் மிக நீண்ட தடையற்ற வெடிப்பு (Vei = 4) ஜூன் 23, 1897 அன்று ஏற்பட்டது. இவ்வெடிப்பின் போது 7 நாட்கள் தொடர்ச்சியாக நெருப்பு பிழம்புகளைக் கக்கியது மயோன். மீண்டும் எரிமலை வெடித்து பாறைக்குழம்பு கீழாக வடிந்து மக்கள் வசித்த பகுதிகளில் பாய்ந்தது. இதனால் எரிமலையின் அடியில் 11 கிலோமீட்டர்கள் (7 மைல்) தொலைவில் கிழக்கே பக்கே என்ற கிராமம் 15 மீட்டர் (49 அடி) ஆழத்தில் புதையுண்டது.

1984 மற்றும் 1993 வெடிப்புகள்

எந்த இறப்புகளும் பதிவு செய்யப்படாத 1984 ஆம் ஆண்டு வெடிப்பின் போது பிலிப்பைன்சு எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளின் பரிந்துரையின் காரணமாக 73,000 இற்கும் மேற்ப்பட்ட மக்கள் ஆபத்தான பகுதிகளிலிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் 1993 ஆம் ஆண்டு, பைரோகிளாஸ்டிக் வெடிப்பு போது, 75 பேர், பிரதானமாக விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

வெளியிணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
மயோன் எரிமலை க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Casa Bicolandia Suites

தொடங்கி $20

Mayon Lodging House

தொடங்கி $13

FJ Manila Hotel

தொடங்கி $35

Balay de la Rama Bed and Breakfast

தொடங்கி $30

Avia Inn

தொடங்கி $8

Apihap Spa Hotel

தொடங்கி $32

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Capul Island Lighthouse

Capul Island Lighthouse is a lighthouse on Titoog Point in San Luis on

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Los Glaciares National Park

Parque Nacional Los Glaciares (Spanish: The Glaciers) is a national

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Badlands National Park

Badlands National Park, in southwest South Dakota, United States

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Banff National Park

Banff National Park (pronounced ) is Canada's oldest national park,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mount Nemrut

Nemrut or Nemrud (Turkish: 'Nemrut Dağı') is a 2,134 m (7,001 ft) hig

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Crater Lake National Park

Crater Lake National Park is a United States National Park located in

ஒத்த எல்லா இடங்களையும் காண்க