அயூத்தியா (நகரம்)

அயூத்தியா (தாய்: อุทยานประวัติศาสตร์พระนครศรีอยุธยา) பண்டையக்கால சியாமின் (அயூத்தியா பேரரசு) தலைநகராகும். இது தற்போதைய தாய்லாந்து நாட்டில் உள்ளது. தனிச்சிறப்புமிக்க கோபுரங்களுக்காகவும், பெரும் மடாலயங்களுக்காகவும் சிறப்புடையது. உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும், வர்த்தக மையமாகவும், கலாச்சார களமாகவும் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு விளங்கியது. 1767 இல் பர்மா ராணுவத்தால் அழிக்கப்படும்வரை சியாமின் தலைநகராக இருந்தது. 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

வரலாறு

சியாமின்(அயூத்தியா அரசு) தலைநகராக சுகோதாய்க்குப் பிறகு 1350 ஆம் ஆண்டு அரசர் முதலாம் இராமாதிபோதியால் நிறுவப்பட்டது. 1569 இல் பர்மாவிடம் அயூத்தியா அரசு தோற்றது. அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் தன்னாட்சியை இழந்திருந்தது.1584 இல் அரசர் நரேசுவன் பர்மியர்களைத் தோற்கடித்துத் தன்னாட்சியை திரும்பப்பெற்றார். புகழ்பெற்ற அரசர் நராயின்(கி.பி.1656 - கி.பி.1688) தலைநகராக அருகண்மை நகரான லோப் பூரியுடன் இணைந்து விளங்கியது. 417 ஆண்டுகளையும் 35 அரசர்களையும் கண்ட இந்நகரை,இரண்டு ஆண்டுகள் கடுமையான போருக்குப்பின் 1767 இல் பர்மா ராணுவம் நிர்மூலமாக்கியது. அரசர் சூரியட்-அமரின் என்ற ஏகாதத் இங்கிருந்து ஆண்ட கடைசி அரசராவார். பின் சியாமின் தலைநகராக பாங்காக் ஆனது.

அமைவிடம்

அயூத்தியா சாவோ பிரயா,பசக், லோப் பூரி என்ற மூன்று ஆறுகள் இணைவதால் உருவாகும் தீவில் அமைந்துள்ளது. மொத்தம் 289 ஹெக்டர் பரப்பளவுடையது. சுற்றிலும் மலை நெற்கழனிகளைக் கொண்டது. தற்காலத்திய பிரா நாகோன் சி அயூத்தியா மாவட்டத்தில் உள்ளது. சியாம் வளைகுடா அருகண்மையில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் நதியின் மேல்புறம் அமைந்திருந்ததால் அரபு, ஐரோப்பிய அரசுகளிடமிருந்து பாதுகாப்பளித்தது.

பொருளாதாரம்

அயூத்தியா நேர்த்தியான சாலைகளையும், கால்வாய்களையும், அகழிகளையும் கொண்டு சிறப்பான நீர் மேலாண்மையையும் கொண்டிருந்தது. சியாம் வளைகுடாவிற்கு அருகண்மையில் இருந்ததும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் சம தூரத்தில் இருந்ததும் வர்த்தகம் சிறப்புற வழிசெய்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இணைப்புப் புள்ளியாக விளங்கியது.

கலாச்சாரம்

அயூத்தியாவின் கலாச்சாரத்தில் அரிசி முக்கிய பங்கு வகித்தது. அதுவே முக்கிய உணவாகவும், முக்கிய வர்த்தக பொருளாகவும் இருந்தது. அரிசியே வரியாகவும் வசூலிக்கப்பட்டது. அயூத்தியா சமூகம் மூன்று நிலைகளைக் கொண்டிருந்தது. மேல் நிலையில் அரசரும், அடி நிலையில் பொதுமக்களும் அடிமைகளும் இருந்தனர். அயூத்தியா அரண்மனைக்கருகில் அயல்நாட்டவர்களுக்கான தனிக் குடியிருப்புப் பகுதிகள் இருந்தன. அயூத்தியாவின் கலை மற்றும் கட்டிட பாணியில் வெளிநாட்டு தாக்கத்தை காணலாம். அயூத்தியாவின் அரண்மனை மற்றும் பௌத்தவிகாரங்கள் மேம்பட்ட உள்ளூர் தொழில்நுட்பத்தையும், யப்பான், சீன, இந்திய, பாரசீக, ஐரோப்பிய கூறுகளையும் கொண்டுள்ளன.

வெளிநாட்டுறவு

அயூத்தியாவின் தூதுவர்கள் பிரெஞ்சு அரசுசபை, டெல்லியில் முகலாயர்கள் அரசுசபை மட்டுமில்லாமல் சீன, யப்பான் அரசுசபைகளிலும் இருந்தனர். அதேபோல் அயல்நாட்டவர்கள் அயூத்தியாவின் அரசில் தூதுவர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பியர்கள் அயூத்தியா வந்தனர்.1511 இல் போர்ச்சுகீசியத் தூதரகம் திறக்கப்பட்டது. பின் ஸ்பானியர்கள் வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வந்தன. 1662 இல் டச்சு, பிரிட்டிஷ், பிரான்சு நாடுகள் வந்தன.

தற்கால நிலை

அயூத்தியா 1767 இல் பர்மிய போரில் பெரிதும் அழிவுற்றது. பௌத்தவிகாரங்களும் அரண்மனைகளும் இடிக்கப்பட்டன. அயூத்தியாவின் பொருளாதாரம் சரிவுற்றது. எனவே, நகரம் கைவிடப்பட்டது. மக்கள் புதிய அரசின் தலைநகரான பாங்காக்கிற்கு நகர்ந்தனர். எனினும், புதிய நகரம் தாய் மொழி‎யில் ’அயூத்தியா’ என்ற சொல்லைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Mireille Betancourt
2 May 2017
It's a long walk!! Bring very comfortable shoes, hat & light loose clothing. Recommend renting a bike (around 50b) and plenty of water. Must see place!
Ysoon Ng
5 March 2017
The ancient city had its glory days , magnificent architecture !
William
13 January 2017
It's stunning and historical place. Easy access and enjoying.
Andrea
26 May 2015
Maravilloso pero muy caluroso. Es indispensable un sombrero, agua o paraguas para el sol. Asegúrate que tu transporte de regreso a Bangkok tenga aire acondicionado.
Teddy
29 August 2021
世界遺産 1991年登録 古都アユタヤ 具体的な構成資産が規定されていないので、公園全体、中洲全体が世界遺産みたいなもの
Alerrandro Correa
29 May 2016
Passeio obrigatório quando em Bangkok. Todas essas ruínas eram templos que foram destruídos na guerra com Myanmar. Não suba nas estátuas ou colunas, além de perigoso, é desrespeitoso.
வரைபடம்
0.2km from Soi Photharam, Tambon Hua Ro, Amphoe Phra Nakhon Si Ayutthaya, Chang Wat Phra Nakhon Si Ayutthaya 13000, தாய்லாந்து திசைகளைப் பெறுங்கள்
Wed 11:00 AM–4:00 PM
Thu 8:00 AM–4:00 PM
Fri 10:00 AM–6:00 PM
Sat 9:00 AM–7:00 PM
Sun 8:00 AM–7:00 PM
Mon 10:00 AM–6:00 PM

Ayutthaya Historical Park Foursquare இல்

அயூத்தியா (நகரம்) Facebook இல்

Classic Kameo Hotel&Serviced Apartments, Ayutthaya

தொடங்கி $76

Kantary Hotel Ayutthaya

தொடங்கி $85

Ampo Residence Hotel

தொடங்கி $64

Yamadaya Apartment

தொடங்கி $43

Rose Garden Hotel

தொடங்கி $17

Ayutthaya Grand Hotel

தொடங்கி $43

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Mahathat (Ayutthaya)

The Wat Mahathat (Thai วัดมหาธาตุ พระนครศรีอยุธยา, Te

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
வாட் சாய்வத்தாநரம்

வாட் சாய்வத்தாநரம் (Wat Chaiwatthanaram) தாய்லாந்து நாட்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
วัดป่าโมกวรวิหาร

วัดป่าโมกวรวิหาร சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Great Buddha of Thailand

The Great Buddha of Thailand, also known as The Big Buddha, The Big

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
National Science Museum (Thailand)

The National Science Museum is a science museum in Thailand. Located

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dream World

Dream World is a large amusement park in Thanyaburi district, Pathum

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Don Mueang International Airport

Don Mueang International Airport (ไทย. ท่าอา

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Pa Lelai Worawihan

Wat Pa Lelai Worawihan is a temple in Suphan Buri Province, located on

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Quebrada de Humahuaca

The Quebrada de Humahuaca is a narrow mountain valley located in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொம்பெயி

பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நே

ஒத்த எல்லா இடங்களையும் காண்க