நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை (Neuschwanstein Castle, இடாய்ச்சு: Schloss Neuschwanstein, pronounced [nɔʏˈʃvaːnʃtaɪn], ஆங்கிலம்:'New Swanstone Castle') என்பது செருமனியின் தென்மேற்கு பவேரியாவிலுள்ள கொநோஸ்வாங்கா கிராமத்தில் அமைந்துள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு ரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை அரண்மனையாகும். இவ்வரண்மனை ஓய்விடமாகவும் ரிச்சார்ட் வாக்னருக்கு அஞ்சலி செலுத்தவும் பவேரியாவின் இரண்டாம் லுட்விக்கினால் பணிக்கப்பட்டது. லுட்விக் தன் சொந்த நிதியில் இதனைக் கட்டினார்.
கப்படோசீயா ஏழு பாதாள நிலைகளுடன் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழும் ஒரு பாதாள நகரமாக உள்ளது. இது துருக்கியில் தோண்டியெடுக்கப்பட்ட பாதாள நகரங்களிலேயே மிகவும் பெரிய நகரமாகும்.