மீடு ஏரி (Lake Mead) ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இது கொலராடோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த ஏரி நெவாடா மாநிலத்தின் லாசு வேகாசில் இருந்து இது 30 மைல் தொலைவில் உள்ளது. ஊவர் அணையானது கொலராடோ ஆற்றின் போக்கைத் தடுப்பதால் ஏற்பட்ட இந்த ஏரி அணைக்குப் பின் 111 மைல்கள் நீளத்திற்குப் பரந்துள்ளது. இந்த ஏரி நீரானது நெவாடா, தென் கலிபோர்னியாவின் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மீடு ஏரியில் பலவகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. படகு சவாரி இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று. மீன் பிடித்தல், நீச்சல், சூரியக்குளியல் போன்றன மற்றவை.